கோவை மக்களே உஷாரா இருங்க! 4 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: பிப்ரவரி மாதத்தில் வழக்கமாக மழை பெய்யாது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை மீறி மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்தில் கோயம்புத்தூர் உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து விடுக்கப்பட்டிக்கும் அறிவிப்பில், "கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Coimbatore Weather Alert

கோயம்புத்தூருக்கு அலர்ட்

முன்னதாக இன்று மதியம் விடுக்கப்பட்டிருந்த வானிலை எச்சரிக்கையில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை முதல் மார்ச் 5 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு:

28 மற்றும் மார்ச்.1ம் தேதி தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை வானிலை நிலவரம்

இன்று (27-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (28-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+