மெரினா டூ உத்தண்டி வரை! அடுத்த 2 மணி நேரம் வரை மழைக்கு வாய்ப்பு! சென்னை ரெயின்ஸ் அப்டேட்
சென்னை: மெரினாவில் இருந்து உத்தண்டி வரை கடலோர பகுதிகளில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்யும் என சிஎம்ஓகே தெரிவித்துள்ளது. சென்னை ரெயின்ஸ் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம்தான் இத்தகைய தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த மழையானது ஒரு காற்றழுத்தத்துடன் தொடங்கியது. அது சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் காற்றின் திசை காரணமாக தெற்கு ஆந்திராவுக்கு சென்றுவிட்டது.

எனினும் சென்னையில் மிகவும் கனத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி சில மணி நேரங்களில் வடிந்துவிட்டது. இந்த நிலையில் அந்த காற்றழுத்தத்தின் தாக்கம் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னையில் இரவு அல்லது அதிகாலை வேளைகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
அது போல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன் தின நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அது போல் நேற்றைய தினமும் உள்மாவட்டங்களான திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் சென்னையில் மேக மூட்டமாக இருந்த நிலையில் நல்ல வெயில் காய்ந்தது. மாலை நேரத்தில் குளிர்ச்சியான காற்று வீசியது. அது போல் இன்று அதிகாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பூங்காக்கள், குளங்கள் நிரம்பியதாக சொல்லப்படுகிறது.
இந்த மழை குறித்து சென்னை ரெயின்ஸ் கூறியிருப்பதாவது: சென்னையின் தென் பகுதிகளில் அடர்ந்த மேகக் கூட்டம் கிழக்கு தென் கிழக்கிலிருந்து மேற்கு தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதனால் மெரினா முதல் உத்தண்டி வரை தொடர் மழை பெய்தது. இது அடுத்த ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு நீடிக்கும். அப்போது அது கனமழையாக இருக்கும்.
தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் மேல் அடர்ந்த மேகக் கூட்டங்கள் இருக்கின்றன. இதனால் ராணிப்பேட்டை, மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. சென்னையிலும் இரவு அல்லது அதிகாலை வேளைகளில் நல்ல மழை பெய்யும் என்றும் மற்றொரு ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications