ஆஹா.. புல்லரிக்குது.. மாடியில் சிக்கிய பெண்ணை தூக்கி காப்பாற்றிய கமாண்டோ படை! புயலுக்கு இடையே திகில்
சென்னை: மணப்பாக்கம் பகுதியில் வீட்டு மாடியில் சிக்கி இருந்த பெண்ணை கமாண்டே படை வீரர்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தூக்கி கீழே இறக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து கடும் இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். வெள்ளம் வீடுகள், கட்டிடங்களில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு படையினர் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. மாநகரின் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற இயலாத அளவுக்கு பல இடங்களில் மழை பாதிப்பு கடுமையாக இருக்கிறது.
நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக பெரு மழையின் தாக்கத்தால் செல்போன் சார்ஜ் இல்லாமல் அவசர உதவி கூட கேட்க இயலாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடைகள், உணவகங்கள் மூடப்பட்டதால் விடுதிகளில் தங்கி இருந்தவர்கள், உணவின்றி தவித்து வருகின்றனர். தண்ணீர் வீடுகளின் தரைத் தளங்களில் புகுந்த காரணத்தால் படகுகள், பரிசல்கள் மூலமாக பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் புயல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக மக்களின் துயரங்கள் வீடியோக்களாக வெளியாகி வருகின்றன.

அரசு ஒரு பக்கம் முழு வீச்சில் மீட்புப் பணிகளையும் உதவிகளையும் செய்து வந்தாலும், அதற்கு உறுதுணையாக தன்னார்வலர்களும், பொதுமக்களும் மீட்புப் பணிகள், நிவாரண உதவிகளை மேற்கொண்ட் வருகிறார்கள். தொடர் பணிகளின் காரணமாகவும், மழை குறைந்ததாலும் சென்னையின் பல இடங்களில் தேங்கிய வெள்ளம் வடிந்து இருக்கிறது. வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை இன்னும் சரியாகவில்லை. வீடுகளின் மாடிகள், மேல் தளங்களில் சிக்கிய மக்கள் கீழே இறங்க முடியாமல் உணவின்றி தவித்து வந்தனர். அவர்களை மீட்கும் பணியில் கமாண்டே படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை மணப்பாக்கம் பகுதியில் வீட்டின் மேல் தளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கமாண்டோ வீரர்கள் ஈடுபட்டார்கள். அப்போது ஒரு பெண்ணின் இடுப்பில் துணியை கட்டி 3 ஜன்னல் சன்சைட் மேல் ஏறி நின்று அந்த பெண்ணை தூக்கி கடும் சிரமங்களுக்கு இடையே கீழே இறக்கினர். பரபரப்பான இந்த மீட்பு காட்சி காண்போரை நெகிழ வைத்து உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications