School Leave: மொந்தா புயலால் தொடர் மழை.. சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
சென்னை: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மொந்தா புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. சென்னையிலும் பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னையில் குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட 6 ஏரிகளிலும் நீர்மட்டம் கடகடவென உயர்ந்துள்ளது.

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
இயல்படை விட தற்போது அதிக மழைப்பொழிவானது பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது. அதே நேரத்தில் தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள மொந்தா புயலும் நாளை கரையை கடக்க இருப்பதால் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மொந்தா புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் இன்றே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கும் விடுமுறை
சென்னையில் மொந்தா புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்ன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூரிலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications