விடிய விடிய மழை விடாது போல.. செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது!
சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுட்ன லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களாகவே மழை தமிழகம் முழுக்க ஆங்காங்கே பெய்து வருகிறது. இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்தது.

நள்ளிரவு 1 மணி வரை
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி வரை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில், "இன்று நள்ளிரவு 1 மணி வரை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மழை பெய்யுமா
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "சென்னையில் இன்று (25-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (26-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்
தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
* ஊத்து (திருநெல்வேலி) 14,
* நாலுமுக்கு (இருநெல்வேலி) 13,
* காக்காச்சி (திருநெல்வேலி) 11,
* பாலமோர் (கன்னியாகுமரி) 9, மாஞ்சோலை (இருநெல்வேலி) 9,
திற்பரப்பு (கன்னியாகுமரி) 8,
* இடையப்பட்டி (மதுரை), மதுரை நகரம் (மதுரை), தல்லாகுளம் (மதுரை), சுருளக்கோடு (கன்னியாகுமரி) தலா 7.
* மேட்டுப்பட்டி (மதுரை), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), பெரியபட்டி (மதுரை) தலா 6,
* முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி) சிட்டம்பட்டி (மதுரை), சிற்றாறு-) (கன்னியாகுமரி), சோழவந்தான் (மதுரை). சுன்னியாகுமரி (கன்னியாகுமரி). பேச்சிப்பாறை (கன்னியாகுமரி). கன்னிமார் (கன்னியாகுமரி) தலா 5 செமீ மழை பெய்துள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications