Cyclone Akvan: வங்கக் கடலில் வருகிறான் ‘அக்வான்’.. புயல் சின்னத்தால் கொட்டப் போகுது மழை! ஐஎம்டி கொடுத்த அப்டேட்!
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 15-ஆம் தேதி புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறினால் ஈரான் பரிந்துரைத்த 'அக்வான்' எனப் பெயரிடப்படும். இதன் காரணமாக நவம்பர் 15 முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் அடுத்தடுத்து 'ஒர்னாப்' மற்றும் 'முரசு' புயல்கள் உருவான நிலையில் தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை. கடலோர மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் வங்கக் கடலில் மற்றும் ஒரு புயல் உருவாவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. வரும் 16ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் தற்போது அதற்கான காலம் கனிந்து உள்ளது போல் தெரிகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் மேல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேல் சுழற்சி நிலவுகிறது. இது நாளை (நவம்பர் 13ஆம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் ( நவம்பர் 15ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அதாவது புயல் சின்னமாக வலுவடைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 13ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நவம்பர் 15ஆம் தேதி புயல் சின்னமாக வலுப்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஒருவேளை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறினால் 'அக்வான்' எனப் பெயரிடப்படும். இந்த பெயரை பரிந்துரைத்தது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது. 'அக்வான்' புயல் சின்னத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
