Hari Nadar: அம்பை தொகுதியில் நானே களமிறங்குவேன்.. விஜய்க்கு கண்டிஷன் போட்ட ஹரி நாடார்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக சீமான் அறிவித்துள்ள நிலையில், அதே தொகுதியில் தானும் போட்டியிடுவேன் என்று ஹரி நாடார் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ள ஹரி நாடார் அது நிறைவேற்றப்படாவிட்டால் களமிறங்குவது உறுதி என்றார். ஹரி நாடார் வைத்த கோரிக்கை என்ன? என்பது பற்றிய விரிவான விவரங்களை பார்க்கலாம்.

தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் இசக்கி சுப்பையா. சட்டமன்றத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர். அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.

Hari Nadar put Condition to vijay says if not Met I will contest in Ambasamudram

ஹரி நாடார் அறிவிப்பு

இதனால் காலியாக இருக்கக்கூடிய அம்பை தொகுதிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காலியாக இருக்கக் கூடிய திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் போது அம்பை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்க உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதனால், இந்த இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படுகிறாரா? என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது. பசியோடு இருப்பவன் பிரியாணி கிடைத்தால் சாப்பிட மாட்டானா என்று சீமானும் ஆமோதிக்கும் வகையில் பேசியுள்ளார். இதனால், அம்பை தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தொகுதியில் நாடார் வேட்பாளரை தவெக நிறுத்தாவிட்டால், நானே போட்டியிடுவேன் என்று ஹரி நாடார் அறிவித்துள்ளார்.

நாடார் வேட்பாளரை நிறுத்தாவிட்டால்..

இது தொடர்பாக ஹரி நாடார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அம்பை சட்டமன்ற தொகுதி நாடார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதி. அப்படி இருக்கும் போது தமிழக முதல்வர் விஜய், நாடார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வகையில், நாடார் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை நாடார் சமுதாய மக்களின் கோரிக்கையாகவே நான் வைக்க கடமைப்படுகிறேன்.

நாடார்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே வருகிறோம். எனவே தவெக நாடார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வகையில் நாடார் வேட்பாளரை களமிறக்கி எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும். நாடார் சமுதாயம் சார்ந்து தவெக வேட்பாளரை நிறுத்தாவிட்டால் கண்டிப்பாக நானே போட்டியிடுவேன்" என்றார். தவெக சார்பில் மீண்டும் இசக்கி சுப்பையாவே களமிறக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையில், ஹரி நாடார் இவ்வாறு கூறியுள்ளார்.

யார் இந்த ஹரிநாடார்?

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே இலந்தைகுளம் என்ற கிராமத்தைச் சோ்ந்தவா் ஹரி நாடாா். கடந்த 2021 சட்டமன்ற தோ்தலில் சுயேச்சையாக ஆலங்குளம் தொகுதியில் களமிறங்கினார். இவர் அந்த தொகுதியில் 37,727 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் வேட்பு மனு தாக்கல் செய்தார். எனினும், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

அம்பை தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட இசக்கி சுப்பையா 65,589 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம், இடத்தை காங்கிரஸ் கட்சி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 55,334 வாக்குகள் கிடைத்தன. தவெக வேட்பாளர் 53,611 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சிக்கு 14,906 வாக்குகள் கிடைத்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+