ட்விஸ்ட் கொடுக்க போகும் திமுக? சீக்கிரமே நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்.. தாக்கலாகும் டிலிமிடேஷன் மசோதா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இந்த மசோதாவுக்கு மக்களவையில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் அதை நிறைவேற்ற மத்திய அரசு முயல்வது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 131வது திருத்த மசோதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்ட திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேறவில்லை. ஏப்ரல் 16ஆம் தேதி மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தார். மறுநாளே, அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி அரசியலமைப்பு திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்தது.

Delimitation Bill

டிலிமிடேஷன் மசோதா

2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நாரி சக்தி வந்தன் சட்டத்தின்படி, லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில்தான் தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. எனினும், தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதன் காரணமாகவே கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறவில்லை.

மாறிய அரசியல் சூழல்

இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் மசோதா தோல்வியடைந்ததற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழலும் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இருந்த 22 எம்பிக்களில் 20 பேர் அவரிடமிருந்து விலகி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். மேலும், இந்தியா கூட்டணியின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்த திமுக இப்போது காங்கிரஸில் இருந்து விலகியே நிற்கிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவை பெற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

எதிர்ப்பு ஏன்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முக்கிய காரணம், இதனால் வட மாநிலங்களுக்கு அதிக அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்பதுதான். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஒப்பீட்டளவில் குறையும். மாறாக மக்கள்தொகை திட்டத்தை முறையாக பின்பற்றாத வடமாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்பதே பிரதான சிக்கல்.

அடுத்து என்ன

இதற்கிடையே தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு புதிய முன்மொழிவையும் கொண்டுவருவதற்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படாததையும் கார்கே சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு 64 நாட்கள் கடந்தும் இரு அவைகளும் முறைப்படி முடித்து வைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே மத்திய அரசு மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டும் என்ற தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது. அப்படியொரு வேளை மத்திய அரசு சிறப்பு கூட்டத்தை கூட்டி, மசோதாவை அறிமுகப்படுத்தினால் அப்போது எந்த கட்சி எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பதே தேசியளவில் விவாதமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+