Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புயல் வருமா?.. வங்கக்கடலில் வீசும் சூறாவளி.. மீனவர்களே கரை திரும்புங்கள்.. பாலச்சந்திரன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் வரும் 26 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் விரைவில் கரை திரும்ப வேண்டும் என்று பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஆறுகள் எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் எங்கும் நிரம்பி வழிகின்றன.

Cyclone blowing in the Bay of Bengal Fishermen return to the shore says MET office Balachandran

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. 8 இடங்களில் மிக கனமழையும், 45 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரியின் கீழ் கோத்தகிரியில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 37.3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன் தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் என்று கூறினார்.

இன்றைய தினம்."நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நாளைய தினம் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 10 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் 317.4 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில் 286.8 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. சென்னையில் இயல்பை விட 28 சதவிகிதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 27ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இன்றைய தினம் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று
மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26 ஆம் தேதியன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27ஆம் தேதியன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+