தீவிர புயலாக கரையைக் கடக்க தொடங்கியது "டானா.." மணிக்கு 120 கி.மீ வேகம் வரை வீசும் காற்று.. ஹை அலர்ட்
டெல்லி: டானா புயல் நள்ளிரவு 12.20 மணிக்கு புயல் கரையைக் கடக்க தொடங்கியது. அடுத்த 3-4 மணி நேரம் வரை புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். புயல் கரையைக் கடக்க தொடங்கியிருப்பதால் பலத்த காற்று வீசி வருகிறது. கனமழையும் பெய்து வருகிறது. மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடையிடையே 120 கிலோ மீட்டர் வரையிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று புயலாகவும் வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டு உள்ளது. டானா புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தீவிர புயலாகவும் உருவெடுத்தது. இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை வீச வாய்ப்புள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகக்ள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் 4 லட்சமும் பேரும், மேற்கு வங்காளத்தில் 2.82 லட்சம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 7,200 புயல் நிவாரண முகாம்களை ஒடிசா அரசு ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் 22 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
டானா புயலினால் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பால்சோட் மாவட்டங்கள் அதிக அளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 100 - 120 கி.மீட்டர் வரை வீசும் என்றும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலிலும் 1 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், பூர்பா மற்றும் பஸ்சிம் மெதினிபூர், ஜார்கிராம், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்லி ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டானா புயல் நள்ளிரவு 12.20 மணிக்கு புயல் கரையைக் கடக்க தொடங்கியது. அடுத்த 3-4 மணி நேரம் வரை புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். புயல் கரையைக் கடக்க தொடங்கியிருப்பதால் பலத்த காற்று வீசி வருகிறது. கனமழையும் பெய்து வருகிறது. மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடையிடையே 120 கிலோ மீட்டர் வரையிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications