Cyclone Ditva: பைபாஸ்லயே போய் பஞ்சராக்க போகுது! 24 மணி நேரத்தில் சம்பவம் உறுது! தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!
சென்னை: டிட்வா புயல் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரம் வரை டெல்டா கடற்கரையிலிருந்து கடல் பகுதியிலேயே இருக்கும் என்பதால் டெல்டா பகுதிகளில் மாலை வரை மழை தொடரும் எனவும், அடுத்ததாக கடலூர் மட்டும் பாண்டிச்சேரி நோக்கி மழை நகரும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் நாகை மயிலாடுதுறையில் மிக கனமழையும், கடலூர் பாண்டிச்சேரி பகுதிகளில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

டிட்வா புயல்
இந்த நிலையில், டிட்வா புயல் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரம் வரை டெல்டா கடற்கரையிலிருந்து கடல் பகுதியிலேயே இருக்கும் என்பதால் டெல்டா பகுதிகளில் மாலை வரை மழை தொடரும் எனவும், அடுத்ததாக கடலூர் மட்டும் பாண்டிச்சேரி நோக்கி மழை நகரும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் நாகை மயிலாடுதுறையில் மிக கனமழையும், கடலூர் பாண்டிச்சேரி பகுதிகளில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," டிட்வா புயல் இது தமிழக கடற்கரைக்கு இணையாக கடலோர பைபாஸ் ரைடராக நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை கடற்கரையை நெருங்கி ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும். தற்போது தமிழகத்தில் டெல்டா பகுதியில் கனமழை தொடங்கியுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் கடலுக்கு அருகிலுள்ள பகுதிகளில், குறிப்பாக கடலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் 175 முதல் 250 மிமீ வரை பதிவாகியுள்ளது.
கனமழை எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்திற்கான முன்னறிவிப்பாக, டிட்வா சூறாவளி டெல்டா கடற்கரையிலிருந்து திறந்த கடலில் இருப்பதால், டெல்டா பகுதிகளில் மாலை வரை மழை தொடரும். தொடர்ந்து இந்த மழை மெதுவாக கடலூர் மற்றும் பாண்டிச்சேரியை நோக்கி நகரும். கேடிசிசி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு) - ஈசிஆர் பகுதிகளில் மாலை / இரவு முதல் மழை அதிகரித்து பின்னர் நகரத்தின் உள் பகுதிகளை நோக்கி நகரும்.
மிக அதிக மழை
தெற்குப் பகுதிகளில் / செங்கல்பட்டில் மிதமானது முதல் கனமழை வரை எதிர்பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு சிறந்த நாளாக அமையும், அடுத்த 24 மணி நேரத்தில், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்பகுதிகள், விழுப்புரத்தில் கனமழையும், அடுத்த 24 மணி நேரத்தில் நாகை, மயில்துறை, கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் மிக கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, பாண்டிச்சேரி பகுதிகளில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக அதிக மழையும் பெய்யும்" என கூறியுள்ளார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications