60 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் அச்சுறுத்தும் டிட்வா புயல்.. ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்!
சென்னை: டிட்வா புயலால் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன. நாளை புறப்படும் ரயில்களும் மாற்றப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், இராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. தனுஷ்கோடியில் சாலையை கடல் நீர் மூழ்கடித்தது. இதனால் தனுஷ்கோடியில் உள்ள மீனவ மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். பொதுமக்களும் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மண்டபம் ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பாம்பன் கடலில் பலத்த காற்று வீசிவருவதால் ராமேஸ்வரம் வரும் ரயில்கள் பாம்பன் புதிய ரயில் பாலத்தினை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ஓகா ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள் முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ளவும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ராமஸ்வரத்தில் இருந்து இன்று புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22662) மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் நாளை (29 ஆம் தேதி) சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்:22662) இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம் சென்ட்ரல் அமிர்தா எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16344) ரயிலும் நாளை இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.
இதேபோல் சென்னை எழும்பூர் விரைவு எக்ஸ்பிரஸ் (வ.எண்:16752), கன்னியாகுமரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 22621), தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16104) ஆகிய ரயில்கள் நாளை (29ம் தேதி) மண்டபத்தில் இருந்து புறப்படும். திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (வ.எண்: 16850) மானாமதுரையில் இருந்தும், மதுரை பயணிகள் உச்சிப்புளியில் இருந்தும் நாளை புறப்படும். இது தவிர புவனேஸ்வர் -ராமேஸ்வரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 20849) மண்டபத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications