டிட்வா புயலால் மழை தட்டி வீசப்போகுது.. தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!
சென்னை: டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 28 ஆம் தேதி) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிவகங்கை, தூத்துக்குடி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' வார்னிங்கும் கடலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'மஞ்சள் அலர்ட்' வார்னிங்கும், விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு " டிட்வா" என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த டிட்வா புயல் தென்மேற்கு வங்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதி வழியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அன்று அதிகாலைக்குள் வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கரையை வழியாக கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
வங்கக்டலில் உருவாகி உள்ள டிட்வா புயலால் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 வரையிலும் இடையிடையில் 80 கி.மீட்டர் வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். மேலும், தொடர் கனமழை மற்றும் கடலில் உயரிய அலை சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 28 ஆம் தேதி) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை, தூத்துக்குடி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' வார்னிங்கும் கடலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'மஞ்சள் அலர்ட்' வார்னிங்கும், விடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications