“டிட்வா புயல் சென்னையை தாக்குமா என்று தெளிவாக தெரியவில்லை” - அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பேட்டி
சென்னை: சென்னையை டிட்வா புயல் தாக்குமா? என்பது பற்றியும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். புயலின் தாக்கம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் , "சென்னை மற்றும் விழுப்புரத்தில் தலா 5 பேரிடர் மீட்பு படை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் அதிக மழை பதிவாகியுள்ளது.
டிட்வா புயல் சென்னைக்குள் வராமல் சென்னையை ஒட்டியே செல்லும் என வானிலை மையம் கூறியுள்ளது. டிட்வா புயல் சென்னையைத் தாக்குமா? என்று தெளிவாகத் தெரியவில்லை. 28 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 10 குழுக்கள் பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவைக்க உள்ளோம்.
விமானப்படை மற்றும் கடலோர காவல் படைக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாளை பாதிப்பை பொறுத்து தேவையான மாவட்டங்களுக்கு கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுவரை போக்குவரத்து பாதிப்பு, உயிரிழப்பு இல்லை. 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன, 24 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. எந்தத் துறை அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து, துறை சார்ந்த மூத்த அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லா மாவட்டத்திலும் 6000+ நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன." எனத் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications