பல வருஷத்துக்கு பிறகு முதல் புயல்.. கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை கிராஸ் செய்யப்போகிறது: வெதர்மேன்
கோவை: ஃபெஞ்சல் புயல் காரணமாக உச்சகட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள இந்த புயல் நாளைதான் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் பெரு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கோயம்புத்தூர் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தொடர் ஆய்வுகளை நடத்தி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து நிலவரங்களையும் கண்காணித்து வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டத்துக்கு 47 ஆண்டுகளுக்குப் பிறகு புயல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், பொதுமக்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆனால், கொங்கு மண்டல மக்கள் இந்த புயல் சின்னத்தால் பயப்படத் தேவையில்லை. இந்த புயலானது நமது கொங்கு மண்டலம் வழியாக அரபிக் கடலுக்கு சென்றாலும் நமது கொங்கு மண்டலத்திற்கு வரும் பொழுது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருக்கும்.
இதனால், கொங்கு மண்டலத்திற்கு காற்று பாதிப்பு இருக்காது. நாளை மதியத்திற்கு மேல் கனமழை மற்றும் மணிக்கு 30-50 கிலோ மீட்டர் காற்றை மட்டுமே நாம் எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளதாவது: கொங்கு மண்டல மக்களள் இந்தப் புயல் சின்னத்தால் பயப்பட வேண்டாம்.
வங்கக் கடலில் சென்னைக்கு தென் கிழக்கு திசையில் 180 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள FENGAL புயல் சின்னமானது வரும் மணி நேரங்களில் படிப்படியாக மேற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்றிரவு மகாபலிபுரம் முதல் மரக்காணம் இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கும்.
இந்த புயல் சின்னமானது கரையை கடந்த பின் படிப்படியாக வலுவிழந்து தென்மேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். இந்த புயல் சின்னமானது அரபிக் கடலின் உயர் அழுத்தத்தால் நகர்வதால் தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொங்கு மண்டலம், கேரளா வழியாக அரபிக் கடலுக்குச் சென்றடையும்.
கொங்கு மண்டலத்தில் கனமழைக்கு வாய்ப்பு: இந்த புயல் சின்னமானது இன்று இரவு வட தமிழகத்தில் கரையை கடந்து நாளை மதியம் வாக்கில் கொங்கு மண்டலத்தை வந்தடையும். இதனால், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை மதியத்துக்கு மேல் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை நாம் எதிர்பார்க்கலாம்.
அச்சம் வேண்டாம்: இந்த புயலானது நமது கொங்கு மண்டலம் வழியாக அரபிக் கடலுக்கு சென்றாலும் நமது கொங்கு மண்டலத்திற்கு வரும் பொழுது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருக்கும். இதனால் கொங்கு மண்டலத்திற்கு காற்று பாதிப்பு இருக்காது. நாளை மதியத்திற்கு மேல் கனமழை மற்றும் மணிக்கு 30-50 கிலோ மீட்டர் காற்றை மட்டுமே நாம் எதிர்பார்க்கலாம்.
கனமழை காரணமாக ஆங்காங்கே தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கலாம். ஆனால், பயப்படும் அளவுக்கு வெள்ளம் வராது. நமது கொங்கு மண்டலம் மேற்கிலிருந்து கிழக்கு சரிவு பகுதி என்பதால் மழை நீர் விரைவில் நதிகள் வழியாக வழிந்து ஓடிவிடும். இதனால் கோயம்புத்தூர் மக்கள் எந்தவித அச்சமும் படத்த தேவையில்லை.
ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நல்ல மழைப்பொழிவுக்கு மட்டுமே நாம் தயாராகுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications