Cyclone Fengal LIVE: மிரட்டிய ஃபெஞ்சல் புயல்.. சென்னை மீனம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 செமீ மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் இன்று காலை 8.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை 12 மணி நேரத்தில் 15 செமீ மழை பெய்துள்ளது. பேசின் பிரிட்ஜில் 14 செமீ மழையும், வலசரவாக்கத்தில் 13.5 செமீ மழையும், வடபழனியில் 13.38 செ.மீ மழையும், திருவொற்றியூர் - 13.35 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பெங்கல்- பெஞ்சல் புயல் குறித்த லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் நிலையில் சூறைக்காற்று வீசி வருகிறது. மழை ஓய்ந்த நிலையில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே பலத்து காற்று வீசுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம், மரக்காணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புயல், மழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை இன்று இரவுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் சரியாக செயல்படுகிறது. புயல் கரையை கடக்க ஆரம்பித்ததும் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். மழையின் தாக்கம் குறையும் வரை சென்னையில் உள்ள நிவாரண முகாம்களில் உணவு வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் குறைந்தால் மட்டுமே மின் விநியோகம் செய்யப்படும் - மின் வாரியம்
தி.நகர், கோடம்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலைகளில் தண்ணீர் குறைந்தால் மட்டுமே மின் விநியோகம்- மின் வாரியம் மின்சார பெட்டி வரை தேங்கியுள்ள மழை நீரின் அளவு குறைந்தால் மட்டுமே மின் விநியோகம் - மின் வாரியம்
எங்கெல்லாம் தண்ணீர் வடிகிறதோ அங்கெல்லாம் உடனே மின்சாரம் கொடுக்கப்படும் - மின் வாரியம்
தி.நகர், கோடம்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலைகளில் தண்ணீர் குறைந்தால் மட்டுமே மின் விநியோகம்- மின் வாரியம் மின்சார பெட்டி வரை தேங்கியுள்ள மழை நீரின் அளவு குறைந்தால் மட்டுமே மின் விநியோகம் - மின் வாரியம்
எங்கெல்லாம் தண்ணீர் வடிகிறதோ அங்கெல்லாம் உடனே மின்சாரம் கொடுக்கப்படும் - மின் வாரியம்
மரக்காணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல், மழை காரணமாக மரக்காணம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆவடி பகுதியில் காலை 11 மணி முதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பிறகு மின் வினியோகம் வழங்கப்படும் என மின்சார வாரியத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரவு 7 மணி வரை கன முதல் மிக கனமழை வாய்ப்பு உள்ளது - சென்னை வானிலை மையம்
பலத்த காற்று எச்சரிக்கையை பொறுத்தமட்டில் புயல் இன்று கரையை கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் - தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
READ MORE
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications