Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது பெஞ்சல் புயல்! இப்போ எங்கே இருக்கு? வானிலை மையம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெஞ்சல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மேலும் வலுவிழந்து வட உள் தமிழ்நாட்டில் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபிறகு நேற்று காலை வலுவிழந்து புதுச்சேரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வந்தது.

புதுச்சேரியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. நாளை கேரள - கர்நாடக பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

cyclone fengal weather rain

வங்கக் கடலில் கடந்த 23 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் 26 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு அருகே வந்து புயலாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், காற்றின் திசை மாறுபாடு காரணமாக புயலாக மாறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர் 29ஆம் தேதி அது புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் (fengal) என்று பெயரிடப்பட்டது. ஃபெஞ்சல் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் அளவுக்கு வலு குறையத் தொடங்கியது. எனினும், 29 ஆம் தேதி கரையைக் கடக்காமல் இரவு வரை போக்குக்காட்டியது.

30 ஆம் தேதி நேற்று முன்தினம் பகல் முழுவதும் மெதுவாக நகர்ந்து வந்த நிலையில், பசிபிக் கடல் பகுதியில் இருந்து வரும் கடல் நீரோட்டம் மரக்காணத்தில் மிகவும் ஆழ்ந்து காணப்பட்டதால், ஃபெஞ்சல் புயலின் ஒரு பகுதி மட்டும் கடல் நீரோட்டத்தால் கடல் நோக்கி இழுக்கப்பட்டது. அதாவது புயலின் ஒரு முனைப்பகுதியை கடல் நீரோட்டம் பிடித்து இழுத்தது. அதனால் புயல் கரையைக் கடக்க முடியாமல் புதுச்சேரி அருகே நிலை கொண்டது.

நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி, இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயலின் ஒரு பகுதி. ஆனால், புயலின் மறு பகுதி கடலில் இருந்து வெளியேற முடியாமல் திணறிய நிலையில் இருந்தது. இதனால் ஏற்பட்ட இழுபறியில் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கடலில் மையம் கொண்டது. இதையடுத்து நேற்று காலை புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

அது பின்னர் மரக்காணம் நோக்கி நகரத் தொடங்கியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக 3 இடங்களில் அதிக கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் 51 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. புதுச்சேரியில் 49 செ.மீ மழை பதிவானது.

புதுச்சேரியில் வலுவிழந்து நிலையில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தரைப் பகுதி நோக்கி நேற்று மதியம் நகரத் தொடங்கியது. இந்நிலையில், புதுச்சேரியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளது. இது தற்போது வட உள் தமிழ்நாட்டில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கும் என்றும், நாளை கேரள - கர்நாடக பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை நிலவக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+