சென்னையில் வெளுத்துக் கட்டும் மழையிலும் 100 சதவீதம் பால் விநியோகம்.. ஆவின் நிர்வாகம் விளக்கம்
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளியுடன் கூடிய காற்று மற்றும் கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு 100 சதவீதம் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. சில சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். பல்வேறு இடங்களில் மழைநீர் சிறிது நேரத்தில் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.

சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் 9 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால், அவ்வழியாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது. 6 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் வடிந்துள்ள நிலயைில், 3 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் மதியத்துக்குள் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், புயல் கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்படுவதால் இன்று இரவு வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம், பெருங்குடி, கிண்டி, பல்லாவரம், தாம்பரம், கோயம்பேடு, வடபழனி, போரூர், பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
அதேபோல, ரெட் ஹில்ஸ், பொன்னேரி, மணலி, திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், பாடி, அயனாவரம், அண்ணா நகர், அசோக் நகர், கேகே நகர், குரோம்பேட்டை, குன்றத்தூர், நாவலூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். சாலைகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு 100 சதவீதம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் எடுத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு தேவையான பால் 100 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சுமார் 15 லட்சம் லிட்டர் பால் , 25,000 பாக்கெட் UHT பால் மற்றும் 10,000 கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு உடனடியாக ஆவின் பால், பால் பவுடர் மற்றும் UHT பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications