மிக்ஜாம் புயல்: நடிகர்கள் சூர்யா, கார்த்தி முதல் கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு முதல் கட்டமாக ரூ10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி அறிவித்துள்ளனர். தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இருப்பதாகவும் நடிகர்கள் சூர்யா, கார்த்தி தெரிவித்துள்ளனர்.
வங்க கடலில் உருவாகி உள்ள மிக்ஜாம் புயல் சென்னை அருகே சுமார் 30 மணிநேரம் நிலை கொண்டு ருத்ரதாண்டவமாடியது. பேயாட்டம் போட்ட மிக்ஜாம் புயல் 35 மணிநேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சுமார் 40 செ.மீ. வரை மழையை கொட்டிவிட்டுள்ளது. தற்போது மிக்ஜாம் புயல் ஆந்திராவுக்குள் நுழைந்துவிட்டது. ஆந்திராவில் நெல்லூர்- மச்சிலிபட்டணம் இடையே நாளை காலை கரையை கடக்கிறது மிக்ஜாம் புயல்.

சென்னை மாநகரம், புறநகர் பகுதிகளில் கனமழை குறைந்து வருவதால் மீட்பு, நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு முழு வீச்சில் இந்த பணிகளை இடைவிடாமல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு உதவ நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக நிவாரணப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும் சூர்யா, கார்த்தி தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications