அப்பாடா! 48 மணி நேரத்திற்கு பிறகு சென்னையில் குறைய தொடங்கிய மழை.. நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்
சென்னை: சென்னையில் கடந்த 2 தினங்களாக விடாமல் வெளுத்து வாங்கிய கனமழை தற்போது குறையத் தொடங்கியது. படிப்படியாக மழை குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மழை எப்போது தான் நிற்கும் என்று ஏங்கி தவித்த மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
வங்க கடலில் நிலை கொண்டு சென்னையை உருக்குலைத்துப் போட்டது மிக்ஜாம் புயல். வரலாறு காணாத பெருமழையை 2 நாட்களாக கொட்டிக் கவிழ்த்து விட்டு ஆந்திராவை நோக்கி நடையை கட்டி இருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னை மாநகரில் கடந்த 2 தினங்களகா விட்டு விட்டு பெய்த நிலையில், நேற்று இரவு முதல் விடிய விடிய பெருமழை பேய்மழை கொட்டியது. இன்று காலை முதல் சுமார் 11 மணிநேரம் இடைவிடாமல் கனமழை வெளுத்தது.

சென்னையில் 35 மணிநேரத்தில் சராசரியாக 40 செ.மீ.க்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் சென்னை மாநகரும் புறநகரும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. விடிய விடிய 2 தினங்களாக பெய்த மழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது. சென்னையின் முக்கிய சாலைகளும் ஆறு போல மாறின. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
விடாது மழை பெய்து கொண்டே இருந்ததால் மழை எப்போது விடத்தொடங்கும் என்று பார்த்துக் கொண்டு இருந்தனர். மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 120 கி.மீட்டர் தூரம் தள்ளி சென்றது. 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த நிலையில் தள்ளி சென்றது மிக்ஜாம் புயல். தற்போது ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தற்போது சென்னையில் மழை குறையத் தொடங்கியுள்ளது.
மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை கடந்து சென்றுவிட்டது. சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 120 கி.மீ தூரத்திற்கு மிக்ஜாம் புயல் நகர்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூரை நெருங்கி கொண்டு இருக்கிறது. நெல்லூருக்கு 80 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னையை கடந்து சென்றாலும் நள்ளிரவு வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதனால் மழை எப்போது தான் நிற்கும் என்று ஏங்கி தவித்த மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications