சென்னையில் "எல்லாத்தையும் நிறுத்துங்க".. அடுக்குமாடி கட்டிடங்களுக்கு புது அதிரடி.. தீவிரமாகுது புயல்
தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது.. இது நாளைய தினம் புயலாக மாறக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

நெல்லூர்: இந்த புயல் சென்னை மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று தற்போது சொல்லப்பட்டுள்ளது... அதேபோல, நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், இது வேகம் குறைந்து டிசம்பர் 5ம் தேதி கரையை கடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையொட்டி, தென் மேற்கு வங்கக் கடலில் புதுவையிலிருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கேயும் சென்னையிலிருந்து 630 கி.மீ. கிழக்கு தென் கிழக்கிலும் நிலவுகிறது.வடதமிழகம்: இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று அதாவது டிசம்பர் 3ம் தேதி புயலாகவும் வலுப்பெற்று, 4ம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக- புதுவை கடலோர பகுதிகளில் நிலவுக் கூடும் என்றும், பிறகு கடலோர பகுதிகளை ஒட்டி வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கடக்கக் கூடும் என்றும் சென்னை வானிலை மையமும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
புயல் ஒருபக்கம், பருவமழை இன்னொரு பக்கம் என தமிழகமே குளிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.
கனமழை: இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் மிக்ஜாம் புயலானது கரையைக் கடந்தாலும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை 4-ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னேற்பாடு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் கட்டுமான பணிகளை நிறுத்துவதுடன் அதற்கான பொருட்களை தரை தளத்தில் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்கள்: அதேபோல, மிச்சாங் புயல் எதிரொலியால் நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.. மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவரைவு ரயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்பட 142 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications