சென்னையை தாக்கிய தீவிர புயல்கள்.. மிக்ஜாம் அமைதியாக கடந்து செல்லுமா? சூறையாடுமா? பாதிப்பு எப்படி?
சென்னை: மிக்ஜாம் புயல் வடசென்னையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 30 ஆண்டுகளில் சென்னையை சூறையாடிய புயல்களைப்பற்றி பார்க்கலாம்.
வட கிழக்கு பருவ மழை: வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே உருவாகின்றன. இதுவரை 6 புயல்கள் மட்டுமே வட கிழக்குப் பருவ மழை அல்லாத மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆராய்ச்சி மையத் தகவலின் படி 1893ம் ஆண்டு முதல் 2016 வரை தமிழகத்தில் 63 புயல்கள் கரையை கடந்துள்ளன. அதில் சென்னையை சில புயல்கள் அதிபயங்கரமாக தாக்கியுள்ளன.

புயல்கள்: கடலில் உருவாகும் சில புயல்கள் கரையை நெருங்கியதும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மணிக்கு 60 - 80 கி.மீ வரை சூறை காற்றை ஏற்படுத்துவது தீவிர புயல் அதை விட 100 கிலோ மீட்டருக்கும் மேல் காற்றை சுழற்றி அடிக்கும் அதி தீவிர புயல். கடந்த 125 ஆண்டுகளில், சென்னையில் நேரடியாக கரையை கடந்த புயல்களின் எண்ணிக்கை 14. அதில் 5 புயல்கள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மழையை மட்டும் தந்து சென்றுள்ளன.
சென்னையை தாக்கிய புயல்கள்: கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையை தாக்கிய வர்தா புயலையும் சேர்த்து 6 புயல்கள் மிகத் தீவிரமானவை என்று சுட்டிக் காட்டியுள்ளது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். இதேபோல மூன்று தீவிர புயல்கள் சென்னையைத் தாக்கியுள்ளன. சென்னை மற்றும் மகாபலிபுரம் பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 22 புயல்கள் தாக்கியுள்ளன.
சுழன்றடித்த சூறாவளி: 1972 ஆம் ஆண்டு சென்னையை புயல் தாக்கிய போது 100 மிமீ முதல் 150 மிமீ வரை மழை பதிவானது. 1984ஆம் ஆண்டு மற்றொரு புயல் சென்னையைத் தாக்கியது. இந்தப் புயல் ஸ்ரீஹரிகோட்டா வழியாக கரையைக் கடந்தது. 1985ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய புயலானது நெல்லூர் வழியாக கரையைக் கடந்தது. அப்போது காற்றின் வேகமானது மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வரை வீசியது.
உயிர்பலி வாங்கிய புயல்: கடந்த 1994 ஆம் ஆண்டு சென்னையை தாக்கிய அதி தீவிர புயலால் 2 நாட்களில் 350 மிமீ மழை பதிவானது. காற்றின் வேகமானது 120 கிமீ முதல் 140 கிமீ வரை வீசியது. அக்டோபர் 29ஆம் தேதி உருவான புயல் 31ஆம் தேதி சென்னையின் கரையை கோரமாக சீண்டியது. தமிழகத்தில் 69 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அப்போது 26 சென்டி மீட்டர் மழை பதிவானது.
பலியான உயிர்கள்: 1994ஆம் ஆண்டு புயல் கரையைக் கடந்த போது 132 கி.மீ வேகத்தில் அதிவேக காற்று வீசியது. வரலாற்றில் சென்னைப் பார்த்த உச்சகட்ட காற்றின் வேகம் அதுவாகத்தான் இருந்தது. புயல் சூறையாடியதில் 61 கோடி ரூபாய்க்கு பொருள் சேதம் ஏற்பட்டது. கடந்த நுற்றாண்டில் சென்னை போன்ற ஒரு மாநகரத்தில் புயலின் கண் எனப்படும் மத்திய சுழல் பகுதி நேரடியாக சென்னையைக் கடந்தது.
ஜல் புயல்: அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று அச்சுறுத்துலுடன் சென்னையை நோக்கி முன்னேறிய ஜல் மிகவும் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைத் தொட்டது. இதனால் கன மழை பெய்தது. சென்னைக்கு பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் ஆந்திராவை வெள்ளக் காடாக்கியது ஜல் புயல்.
தானே புயல்: 2011 டிசம்பரில் உருவான தானே புயல் புதுச்சேரி - கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின. 1994ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னைக்கு அருகே கரையைக் கடந்த தீவிர புயல் நீலம். அக்டோபர் 31ஆம் தேதி மகாபலிபுரத்தில் கரையைக் கடந்த நீலம் புயலால், சென்னையில் 85 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
நீலம் புயல்: சென்னையை நீலம் புயல் தாக்கிய போது 120 மிமீ மழை பதிவானது. காற்றின் வேகமானது 70 கிமீ வேகத்தில் வீசியது. சென்னை துறைமுகத்தில் 7ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. நீலத்தின் வேகத்தால் தரை தட்டி நின்ற பிரதீபா காவிரி கப்பலின், 5 மாலுமிகளையும் சேர்த்து மொத்தம் சென்னையில் 19 பேர் பலியாகினர்.
வர்தா ஏற்படுத்திய வடு: சென்னையைத் தாக்கிய 6 அதி தீவிர புயல்களில் 2016ஆம் ஆண்டு தாக்கிய வர்தா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. வர்தா புயல் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையை தாக்கியது. சென்னையில் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. வர்தா புயலின் கண் பகுதியும் சென்னையைக் கடந்தது. 192 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் சென்னையில் நீண்ட காலமாக இருந்த பல மரங்கள் சரிந்து விழுந்தன. வரலாறு காணாத பெரும்புயலும், மிக மோசமான புயலும் வர்தா தான். சென்னை நகரமே பல நாட்கள் ஸ்தம்பித்தது.
நிவர் புயல்: கடந்த 2018 நவம்பரில் கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 2020 நவம்பரில் வங்கக்கடலில் உருவான நிவர் புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. மாண்டஸ் புயல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரையை கடந்த போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
மிக்ஜாம் புயல்: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் புயலால் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அவ்வப்போது மழையோடு வெயிலும் அடித்த காரணத்தால் தேங்கிய மழை நீரும் மெல்ல வடியத் தொடங்கியிருக்கிறது. கடந்த 27ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமையடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 3ஆம் தேதி புயலாக உருவாக உள்ளது. இந்த புயலானது வடசென்னை மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வடசென்னையை தாக்கும் புயல் பொதுவாகவே வலிமையாகவே இருக்கும். இந்த புயல் அமைதியாக கரையை கடந்து செல்லுமா? அல்லது வட சென்னையை சூறையாடுமா என்று பார்க்கலமா.
எதையும் சமாளிக்கும் சென்னை: தமிழகத்தையும் சென்னை மாநகரத்தையும் எத்தனையோ புயல்களும் மழையும் தாக்கியுள்ளன. சுனாமி என்ற ஆழிப்பேரலை சென்னையை சூறையாடியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளத்தையும் சந்தித்துள்ளது தலைநகரம் சென்னை. 2016 ஆம் ஆண்டு வர்தா புயலை எதிர் கொண்டது. இப்படி எத்தனை இயற்கை பேரிடர்கள் வந்தாலும் எதையும் எளிதில் சமாளித்து மீண்டு எழுந்து கம்பீரமாக நிற்பதுதான் சென்னை மாநகரத்தின் சிறப்பு. மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது சென்னை.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications