Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிக்ஜாம் புயல்.. துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் எண்ணூர், நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வடசென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வங்கக் கடலில் அந்தமான் கடல் பகுதியில் கடந்த 29ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது படிப்படியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய நிலையில், இன்று காலை மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், "தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

Cyclone Michaung: Number 1 storm warning cell in ports Chief Minister Stalins emergency Meeting for Cyclone alert

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். இந்த புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரைத்த மிக்ஜாம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் டிசம்பர 4ல் அதிகாலை தெற்கு ஆந்திரா - வட தமிழகத்தில் சென்னைக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும்.மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம்.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள் எனவே இன்றைய தினம் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக பழவேற்காட்டில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்க கூடிய சூழலில் நாளை மறுநாள் புயலாக வலுப்பெற்று 4ம் தேதி சென்னைக்கும், ஆந்திராவின் மச்சுளிபட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது

இதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம், வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி இருந்த சூழலில் திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் மீனவர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டனர். இந்த நிலையில் பழவேற்காட்டில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

வங்கக்கடலில் புயல் உருவாகும் எனவும் இந்த புயல் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் துறை அதிகாரிகள், அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னையை புயல் தாக்கும் முன்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டும்? புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+