'லெப்ட் ரைட்' வாங்கிய மிக்ஜாம்.. 35 மணி நேரத்தில் 430 மிமீ.. நள்ளிரவு வரை மழை.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: புயல் சென்னையை கடந்து சென்றாலும் நள்ளிரவு வரை மழை நீடிக்கும் என்றும், மிக்ஜாம் புயலால் நுங்கம்பாக்கத்தில் மட்டும் கடந்த 35 மணி நேரத்தில் 43 செமீ மழை பதிவாகியுள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் சூடுபிடித்தது. அதுவரை வழக்கத்திற்கு குறைவான சதவீத மழையே தமிழகத்தில் பெய்து இருந்தது. ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து படிப்படியாக மழை அதிகரித்தது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் மழையின் சராசரி சதவீதம் அதிகரிக்க தொடங்கியது. தொடந்து வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் இன்று சென்னையே மழை வேண்டாம்.. வேண்டாம்.. என்று சொல்கிற அளவுக்கு வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

நேற்று இரவில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தற்போது வரைக்கும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மக்கள் எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாப்பாடு வாங்குவதற்கோ, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னையை கடந்தது: இதனால் சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கை அடியோடு முடங்கியது என்றே சொல்லலாம். இதற்கிடயே தமிழக அரசும் பல்வேறு முன்னேற்பாடுகளையும், நிவாரண பணிகளையும் செய்து வருகிறது. இதேபோல் பலத்த காற்றும் வீசியதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்திருந்தன. பல இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தது. இதனால் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை கடந்து சென்றுவிட்டது. சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 120 கி.மீ தூரத்திற்கு மிக்ஜாம் புயல் நகர்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து 80 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னையை கடந்து சென்றாலும் நள்ளிரவு வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

செல்போன் சிக்னல் இல்லை: இதேபோல், புயல் சென்னையை கடந்து சென்றாலும் நள்ளிரவு வரை மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் மிக்ஜாம் புயலால் நுங்கம்பாக்கத்தில் மட்டும் கடந்த 35 மணி நேரத்தில் 43 செமீ மழை பதிவாகியுள்ளது என்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " செல்போன் சிக்னல் இல்லை. ஹாட்ஸ்பாட்டிற்காக பக்க்த்திற்கு வீட்டிற்கு வந்துள்ளேன்.
430 மிமீ மழை: நுங்கம்பாக்கத்தில் நேற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணி வரை 230 மி.மீ பதிவாகியிருந்தது. இதன்பிறகு அதாவது இன்று காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 201 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று மாலை 7.30 மணி வரை அதாவது கடந்த 35 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் மட்டும் 430 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையை புயல் கடந்து சென்றபோதிலும் நள்ளிரவு வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications