வேகம் குறைந்த மிக்ஜாம் புயல்.. சென்னையில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது.. வெளியான அப்டேட்
சென்னை: மிக்ஜாம் புயல் நகரும் வேகம் குறைந்துள்ளது என்றும் காலை நிலவரப்படி 11 கி.மீ வேகத்தில் மிக்ஜாம் புயல் நகர்ந்து வந்தது தற்போது, 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக் கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் தற்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் மிக்ஜாம் புயல் கரையை நெருங்கியுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து விட்டு விட்டு கொட்டி வருகிறது.

தற்போது அடுத்த 12 மணி நேரத்திற்கு அதாவது நாளை காலை 8 மணி வரை தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் நகரும் வேகம் குறைந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், "மிக்ஜாம் புயல் நகரும் வேகம் குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 11 கி.மீ வேகத்தில் மிக்ஜாம் புயல் நகர்ந்து வந்தது.
தற்போது, மிக்ஜாம் புயல் 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது. கடந்த 6 மணி நேரமாக வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு 210 கி.மீட்டரும், புதுச்சேரிக்கு 240 கி.மீ தொலைவிலும் கிழக்கு, தென்கிழக்கு திசையில் புயல் உள்ளது" என்று தெரிவித்துள்ளது. முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மழை, புயலால் பாதிப்பு அதிகமாக இருக்கும் தெரிவிக்கபட்டு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications