Cyclone Montha: வங்கக் கடலில் உருவானது ‘மோந்தா புயல்’ எதிர்பார்த்ததை விட ஸ்பீடு! தமிழகத்தில் எங்கு மழை வெளுக்கும்?
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து மோந்தா புயலாக மாறியுள்ளது. கடந்த 4 மணி நேரத்துக்கு முன்பாக 8 கிமீ வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறி 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளைக்குள் தீவிர புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை தீவிர புயலாக மாறும் மோந்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் 100 கிமீ வேகத்தில் கரையைக் கடக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள மோந்தா புயல் சென்னையில் இருந்து தற்போது 640 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

புயல் உருவானது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடந்த 24-ந்தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்திருக்கிறது.
13 கிமீ வேகத்தில் நகர்கிறது
புயல் இன்று உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு "மோந்தா" புயல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையிலிருந்து 640 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டு இருக்கும் இந்த புயல், கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நாளை தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் இந்த புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், ஆந்திராவில் கடலோர பகுதிகள் ஹை அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளன.
எங்கெல்லாம் கனமழை கொட்டும்
ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக ஆந்திராவின் ஓங்கோல் முதல் நெல்லூர் வரையிலான தெற்கு ஆந்திரப் பகுதியில் மிக கனமழையும், குறுகிய நேரத்தில் அதி கனமழையும் பதிவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாவட்டங்களில் கனமழை
ஆந்திராவுக்கு புயல் சென்றதால் சென்னை புயலின் தாக்கத்தில் இருந்து தப்பியுள்ளது. இதனால், சென்னையில் மழை இருக்குமா, இல்லையா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மழை இன்றி மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், புயல் உருவாகியுள்ள நிலையில், வட மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும். புயல் காரணமாக மழை இன்று காலை 11 மணிக்கு மேல் இருந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு கனமழையும், சென்னை, திருவள்ளூரில் அநேக இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
புயல் கரையைக் கடக்கும் போது ஒடிசாவிலும் தாக்கம் இருக்கும் என்பதால் அங்குள்ள 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் ஒடிசா அரசும் தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications