ஹைதராபாத்: மொந்தா புயல் கரையை கடக்கத் தொடங்கிய நிலையில் காக்கிநாடா உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கியுள்ளன.
மொந்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமுதல் மிக கனமழையும் சென்னை, செங்கை, காஞ்சிபுரம்,ராணிப் பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்
மொந்தா புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மொந்தா புயல் எதிரொலியால் ஆந்திர கடலோரப் பகுதி வழியே செல்லும் பல ரயில்களின் புறப்பாடு நேரங்களை ரயில்வே மாற்றி உள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'மொந்தா புயல்', இன்று மாலை அல்லது இரவில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் நிலையில், காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது
Oct 28, 2025, 9:12 pm IST
மொந்தா புயல் கரையை கடக்கத் தொடங்கிய நிலையில் மச்சிலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினம் கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
Oct 28, 2025, 7:47 pm IST
மொந்தா புயல் கரையை கடந்து வருவதால் 7 மாவட்டங்களில் வாகன போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ளனர். மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
Oct 28, 2025, 7:39 pm IST
கரையை கடக்கத் தொடங்கியது மொந்தா புயல்
Oct 28, 2025, 7:39 pm IST
காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது
Oct 28, 2025, 7:39 pm IST
மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கிறது
Oct 28, 2025, 7:11 pm IST
மொந்தா புயல் கரையை நோக்கி நெருங்கி வருவதால் ஆந்திரா துறைமுகத்தில் உஷார் நிலை
Oct 28, 2025, 6:15 pm IST
மொந்தா புயலால் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு ஏரி நிரம்பி அப்பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டதால் மக்கள் அவதி!
Oct 28, 2025, 5:30 pm IST
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை நெருங்கியது மொந்தா புயல்
Oct 28, 2025, 5:30 pm IST
மசூலிப்பட்டினத்திற்கு 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மொந்தா
Oct 28, 2025, 5:30 pm IST
மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
Oct 28, 2025, 1:31 pm IST
மொந்தா புயல் காரணமாக ஆந்திராவின் மிகப்பெரிய நகரமான விசாகப்பட்டினத்தில் இன்று காலையில் அதிகனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மழை எதிரொலி - போக்குவரத்து துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
“சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும். பேருந்துகளில் பழுது தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என கண்காணித்தபடி கவனமாக இயக்க வேண்டும். இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்து புறப்பாடு குறித்து முன்கூட்டியே குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்" என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Oct 28, 2025, 11:45 am IST
ஆந்திர வெதர்மேன் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், விசாகப்பட்டினம் நகரம் குறுகிய காலத்தில் 191 மி.மீ (19 செ.மீ) மழையைப் பதிவு செய்துள்ளது. இது மிக அதிக அளவிலான மழை ஆகும் இருப்பினும், விசாகப்பட்டினத்தின் சிறந்த வடிகால் அமைப்பு காரணமாக, இந்த மழையை நகரம் எளிதாகக் கையாண்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் தற்போதுள்ள மழை இடைவெளி அடுத்த 2 மணி நேரத்திற்குத் தொடரும். அதன் பிறகு குறைவான மழையே பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Oct 28, 2025, 11:27 am IST
ஆந்திர மாநில வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், புயல்கள் கடந்து வரச் சற்று கால அவகாசம் எடுக்கும். கடலோரத்தில் அமைந்துள்ள மற்றும் புவியியல் ரீதியாகக் கடலுக்குள் நீண்டுள்ள விசாகப்பட்டினம் (Vizag) போன்ற பகுதிகள் பொதுவாக மிக விரைவாக மழையைப் பெறுகின்றன. அதே சமயம், விஜயவாடா மற்றும் குண்டூர் (Guntur) ஆகியவை கடலில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள உட்புற நகரங்களாகும். மொந்தா புயல் மழையின் முக்கிய தாக்கம் மத்திய ஆந்திரப் பிரதேசத்தைத் தாக்கும். இது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும், மேலும் இந்த மழை இன்று மாலை முதல் தொடங்கலாம். புயல் தாக்கம் குறைய நாம் பொறுமையுடன் காத்திருந்து, நிலைமையைச் சரியாகக் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Oct 28, 2025, 11:13 am IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, தென்காசி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Oct 28, 2025, 11:10 am IST
வங்கக் கடலில் நிலவி வரும் ‘மொந்தா’ தீவிரப் புயல் காரணமாக சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது
Oct 28, 2025, 10:21 am IST
மொந்தா புயல் காரணமாக ஆந்திராவையொட்டியுள்ள ஏனாமில் இன்று பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி அன்கித் குமார் உத்தரவிட்டுள்ளார். உதவிக்காக 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Oct 28, 2025, 10:16 am IST
மொந்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆவடி அடுத்த நத்தமேடு ஏரியை சுற்றியுள்ள பகுதியை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
Oct 28, 2025, 9:43 am IST
மழை அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இரவு நேரத்திலும் குறுவை அறுவடை செய்து வருகிறார்கள். நெல் தேக்கத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடி கொள்முதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Oct 28, 2025, 9:35 am IST
வங்ககடலில் மையம் கொண்டுள்ள மொந்தா புயல் தீவிரப்புயலாக வலுப்பெற்றது. இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் காக்கிநாடா அருகில் கரையை கடக்கும் காக்கிநாடாவுக்கு தெற்கே தென்கிழக்கே 270 கிமீ தொலைவில் மொந்தா புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.புயல் தற்போது 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 190 கிமீ தொலைவில் மொந்தா புயல் நிலை கொண்டுள்ளது.
Oct 28, 2025, 9:14 am IST
களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவத் தயார்நிலை:
படைப் பிரிவு: 11 தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் 12 மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
தீயணைப்பு, படகு மற்றும் மரம் வெட்டும் குழுக்கள் உயிர் காக்கும் கவசங்கள் மற்றும் மிதவைகளுடன் தயார் நிலையில் உள்ளன.
மருத்துவத் தயார்நிலை: 325 மருத்துவ முகாம்கள், 876 அவசர சுகாதார விரைவுப் படைகள், 108/104 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன, மேலும் 3 படகு மருத்துவமனைகள் இயக்கப்பட்டுள்ளன.
772 மின்சீரமைப்பு குழுக்கள் 11,347 மின்கம்பங்கள் மற்றும் 1,210 மின்மாற்றிகளுடன் தயார் நிலையில் உள்ளன.
சாலைகளைச் சுத்தம் செய்ய 7,289 இயந்திரங்கள், 1,521 தண்ணீர் டேங்கர்கள், 1,037 ஜெனரேட்டர் செட்கள் மற்றும் போதுமான எரிபொருள் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
16 செயற்கைக்கோள் போன்கள், 35 DMR செட்கள் மற்றும் 10 COWs (Cells-On-Wheels - நடமாடும் கோபுரங்கள்) முன்னதாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
மொந்தா புயல் தொடர்பாக பிரதமர் அலுவலகம், இராணுவம், NDRF, NDMA மற்றும் அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து ஆந்திரப் பிரதேச அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
#APpreparesForMontha AP is on high alert for #CycloneMontha. We are fully prepared and a 24x7 RTGS war-room is coordinating evacuations, rescue and restoration with a zero-casualty mission. - About 40 lakh people in 19 districts are in the vulnerable zone and it’s our priority… pic.twitter.com/SyDK6ZGEIE
மொந்தா புயலால் பாதிப்புக்குள்ளாகும் 1,238 கிராமங்களில் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
1,906 நிவாரண முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
3,465 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பாதுகாப்பான மருத்துவமனைப் பராமரிப்பிற்காகக் குறிப்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் மொந்தா புயல் காரணமாக 14,798 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 364 பள்ளிகள் புயல் தங்குமிடங்களாகத் தயார் செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர் 29 வரை அனைத்து மீன்பிடி, படகு சவாரி மற்றும் கடற்கரைப் பயன்பாடு ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Oct 28, 2025, 9:12 am IST
மக்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள்:
பாதிப்புக்குள்ளாகும் மக்கள்: ஆந்திராவில் 19 மாவட்டங்களில் உள்ள சுமார் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படக்கூடிய மண்டலத்தில் உள்ளனர். இவர்களுக்கு குறைந்தபட்ச சிரமத்தை உறுதி செய்வதே முதன்மையான நோக்கமாக செயல்பட்டு வருகிறோம்.
Oct 28, 2025, 9:12 am IST
ஆந்திரப் பிரதேசம் மொந்தா புயலுக்கு தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருந்த பதிவில் புயலின் தாக்கத்தைக் கையாள ஆந்திரப் பிரதேசம் உயர் எச்சரிக்கையுடன் முழுமையாகத் தயாராக உள்ளது. 'பூஜ்ய உயிரிழப்பு இலக்கு' என்ற நோக்குடன், 24x7 செயல்படும் RTGS காட்டுப்பாட்டு அறை மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.
Oct 28, 2025, 9:05 am IST
மழை, மெட்ரோ பணி மற்றும் சாலைப் பள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளின் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியது. பல சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அந்த பள்ளங்களிலும் மழைநீர் தேங்கியது. இன்று காலையில் வேலைக்கு செல்வோர் கடும் சிரமங்களுடன் சாலைகளில் பயணிக்கிறார்கள்.
Oct 28, 2025, 9:03 am IST
வட சென்னையின் தொடர் மழையும், தென் சென்னையின் தூறலும் இன்னும் 2 மணி நேரம் தொடரும். அதன் பிறகு மழை படிப்படியாகக் குறைந்து நின்றுவிடும் என்று மொந்தா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
Montha Final Update - Steady rains in North Chennai and Drizzles in South Chennai will continue to 2 hours and then the rains will reduce and slowly stop.
Rains Recorded. North Chennai 60-70 mm with Ennore and Kathivakkam being very close to sea recorded heavy rains.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 25,500 கன அடியில் இருந்து 15,500 கன அடியாக சரிந்துள்ளது. முழு கொள்ளளவுடன் உள்ள அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு மற்றும் கால்வாய் வழியே விநாடிக்கு 15,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
Oct 28, 2025, 8:13 am IST
சென்னை புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் மீண்டும் 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இன்று காலை 8 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Oct 28, 2025, 8:02 am IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
READ MORE
7:51 AM, 28 Oct
சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவில் மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
7:56 AM, 28 Oct
மோந்தா புயல் எதிரொலியாக இன்று ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
8:02 AM, 28 Oct
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
8:13 AM, 28 Oct
சென்னை புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் மீண்டும் 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இன்று காலை 8 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
8:24 AM, 28 Oct
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 25,500 கன அடியில் இருந்து 15,500 கன அடியாக சரிந்துள்ளது. முழு கொள்ளளவுடன் உள்ள அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு மற்றும் கால்வாய் வழியே விநாடிக்கு 15,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
9:03 AM, 28 Oct
வட சென்னையின் தொடர் மழையும், தென் சென்னையின் தூறலும் இன்னும் 2 மணி நேரம் தொடரும். அதன் பிறகு மழை படிப்படியாகக் குறைந்து நின்றுவிடும் என்று மொந்தா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
Montha Final Update - Steady rains in North Chennai and Drizzles in South Chennai will continue to 2 hours and then the rains will reduce and slowly stop.
Rains Recorded. North Chennai 60-70 mm with Ennore and Kathivakkam being very close to sea recorded heavy rains.
மழை, மெட்ரோ பணி மற்றும் சாலைப் பள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளின் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியது. பல சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அந்த பள்ளங்களிலும் மழைநீர் தேங்கியது. இன்று காலையில் வேலைக்கு செல்வோர் கடும் சிரமங்களுடன் சாலைகளில் பயணிக்கிறார்கள்.
9:12 AM, 28 Oct
ஆந்திரப் பிரதேசம் மொந்தா புயலுக்கு தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருந்த பதிவில் புயலின் தாக்கத்தைக் கையாள ஆந்திரப் பிரதேசம் உயர் எச்சரிக்கையுடன் முழுமையாகத் தயாராக உள்ளது. 'பூஜ்ய உயிரிழப்பு இலக்கு' என்ற நோக்குடன், 24x7 செயல்படும் RTGS காட்டுப்பாட்டு அறை மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.
9:12 AM, 28 Oct
மக்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள்:
பாதிப்புக்குள்ளாகும் மக்கள்: ஆந்திராவில் 19 மாவட்டங்களில் உள்ள சுமார் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படக்கூடிய மண்டலத்தில் உள்ளனர். இவர்களுக்கு குறைந்தபட்ச சிரமத்தை உறுதி செய்வதே முதன்மையான நோக்கமாக செயல்பட்டு வருகிறோம்.
9:13 AM, 28 Oct
வெளியேற்றம் மற்றும் நிவாரண முகாம்கள்:
மொந்தா புயலால் பாதிப்புக்குள்ளாகும் 1,238 கிராமங்களில் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
1,906 நிவாரண முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
3,465 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பாதுகாப்பான மருத்துவமனைப் பராமரிப்பிற்காகக் குறிப்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் மொந்தா புயல் காரணமாக 14,798 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 364 பள்ளிகள் புயல் தங்குமிடங்களாகத் தயார் செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர் 29 வரை அனைத்து மீன்பிடி, படகு சவாரி மற்றும் கடற்கரைப் பயன்பாடு ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
9:14 AM, 28 Oct
களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவத் தயார்நிலை:
படைப் பிரிவு: 11 தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் 12 மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
தீயணைப்பு, படகு மற்றும் மரம் வெட்டும் குழுக்கள் உயிர் காக்கும் கவசங்கள் மற்றும் மிதவைகளுடன் தயார் நிலையில் உள்ளன.
மருத்துவத் தயார்நிலை: 325 மருத்துவ முகாம்கள், 876 அவசர சுகாதார விரைவுப் படைகள், 108/104 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன, மேலும் 3 படகு மருத்துவமனைகள் இயக்கப்பட்டுள்ளன.
772 மின்சீரமைப்பு குழுக்கள் 11,347 மின்கம்பங்கள் மற்றும் 1,210 மின்மாற்றிகளுடன் தயார் நிலையில் உள்ளன.
சாலைகளைச் சுத்தம் செய்ய 7,289 இயந்திரங்கள், 1,521 தண்ணீர் டேங்கர்கள், 1,037 ஜெனரேட்டர் செட்கள் மற்றும் போதுமான எரிபொருள் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
16 செயற்கைக்கோள் போன்கள், 35 DMR செட்கள் மற்றும் 10 COWs (Cells-On-Wheels - நடமாடும் கோபுரங்கள்) முன்னதாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
மொந்தா புயல் தொடர்பாக பிரதமர் அலுவலகம், இராணுவம், NDRF, NDMA மற்றும் அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து ஆந்திரப் பிரதேச அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
#APpreparesForMontha AP is on high alert for #CycloneMontha. We are fully prepared and a 24x7 RTGS war-room is coordinating evacuations, rescue and restoration with a zero-casualty mission. - About 40 lakh people in 19 districts are in the vulnerable zone and it’s our priority… pic.twitter.com/SyDK6ZGEIE
வங்ககடலில் மையம் கொண்டுள்ள மொந்தா புயல் தீவிரப்புயலாக வலுப்பெற்றது. இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் காக்கிநாடா அருகில் கரையை கடக்கும் காக்கிநாடாவுக்கு தெற்கே தென்கிழக்கே 270 கிமீ தொலைவில் மொந்தா புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.புயல் தற்போது 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 190 கிமீ தொலைவில் மொந்தா புயல் நிலை கொண்டுள்ளது.
9:43 AM, 28 Oct
மழை அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இரவு நேரத்திலும் குறுவை அறுவடை செய்து வருகிறார்கள். நெல் தேக்கத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடி கொள்முதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
10:16 AM, 28 Oct
மொந்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆவடி அடுத்த நத்தமேடு ஏரியை சுற்றியுள்ள பகுதியை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
10:21 AM, 28 Oct
மொந்தா புயல் காரணமாக ஆந்திராவையொட்டியுள்ள ஏனாமில் இன்று பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி அன்கித் குமார் உத்தரவிட்டுள்ளார். உதவிக்காக 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
11:10 AM, 28 Oct
வங்கக் கடலில் நிலவி வரும் ‘மொந்தா’ தீவிரப் புயல் காரணமாக சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது
11:13 AM, 28 Oct
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, தென்காசி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
11:27 AM, 28 Oct
ஆந்திர மாநில வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், புயல்கள் கடந்து வரச் சற்று கால அவகாசம் எடுக்கும். கடலோரத்தில் அமைந்துள்ள மற்றும் புவியியல் ரீதியாகக் கடலுக்குள் நீண்டுள்ள விசாகப்பட்டினம் (Vizag) போன்ற பகுதிகள் பொதுவாக மிக விரைவாக மழையைப் பெறுகின்றன. அதே சமயம், விஜயவாடா மற்றும் குண்டூர் (Guntur) ஆகியவை கடலில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள உட்புற நகரங்களாகும். மொந்தா புயல் மழையின் முக்கிய தாக்கம் மத்திய ஆந்திரப் பிரதேசத்தைத் தாக்கும். இது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும், மேலும் இந்த மழை இன்று மாலை முதல் தொடங்கலாம். புயல் தாக்கம் குறைய நாம் பொறுமையுடன் காத்திருந்து, நிலைமையைச் சரியாகக் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
11:45 AM, 28 Oct
ஆந்திர வெதர்மேன் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், விசாகப்பட்டினம் நகரம் குறுகிய காலத்தில் 191 மி.மீ (19 செ.மீ) மழையைப் பதிவு செய்துள்ளது. இது மிக அதிக அளவிலான மழை ஆகும் இருப்பினும், விசாகப்பட்டினத்தின் சிறந்த வடிகால் அமைப்பு காரணமாக, இந்த மழையை நகரம் எளிதாகக் கையாண்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் தற்போதுள்ள மழை இடைவெளி அடுத்த 2 மணி நேரத்திற்குத் தொடரும். அதன் பிறகு குறைவான மழையே பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1:00 PM, 28 Oct
மழை எதிரொலி - போக்குவரத்து துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
“சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும். பேருந்துகளில் பழுது தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என கண்காணித்தபடி கவனமாக இயக்க வேண்டும். இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்து புறப்பாடு குறித்து முன்கூட்டியே குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்" என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
1:25 PM, 28 Oct
ஆந்திராவின் காக்கிநாடாவில் புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
மொந்தா புயல் காரணமாக ஆந்திராவின் மிகப்பெரிய நகரமான விசாகப்பட்டினத்தில் இன்று காலையில் அதிகனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Cyclone Montha Live update tamil: The IMD has issued a red alert for Andhra Pradesh and an orange alert for Odisha, Karnataka, Tamil Nadu and Kerala. The cyclone is expected to make landfall near Kakinada today, with gusts of up to 110 kmph.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.