Cyclone Mantha: வங்கக் கடலையே கொந்தளிக்க வைக்கும் மாந்தா புயல்! பெயர் அர்த்தம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வரும் 27ஆம் தேதி புயலாக மாறும். இதற்கு தாய்லாந்து நாடு மொந்தா என பெயரிட்டுள்ளது. மொந்தா என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் கடந்த இரு தினங்ளாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு வந்தது.

weather rain tamil nadu

இதன் காரணமாக, இன்று (அக்டோபர் 24) காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில், தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும்.

வானிலை மையம் அறிவிப்பின்படி, அக்டோபர் 24ம் தேதியான இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 25ஆம் தேதியான நாளை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அக்டோபர் 26ஆம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி திருவள்ளூர், சென்னை மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 27ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புயலுக்கு 'Montha'என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. மொந்தா என்றால் என்ன என்பதை பார்க்கலாம். பொதுவாக புயலுக்கு வைக்கும் பெயரை கொண்டே அதன் வீரியத்தை அறிந்துக் கொள்ள முடியும்.

வடக்கு இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்கக் கடலில் உருவாகும் வெப்ப மண்டல புயல்களுக்கு 13 நாடுகள் பெயர் வைத்து வருகின்றன. 13 நாடுகள் தலா 13 பெயர்கள் என 169 பெயர்களை கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதி செய்தன.

வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், யேமன் ஆகிய 13 நாடுகள் பெயர் பட்டியலை கொடுத்துள்ளன.

அந்த வகையில் வரும் 27ஆம் தேதி உருவாகும் புயலுக்கு மொந்தா என பெயரிட்டுள்ளது. இதற்கு அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம். Montha என்றால் Churning என்று அர்த்தம். அதாவது கொந்தளித்தல், கடைதல், நுரைத்து கலக்குதல் ஆகிய அர்த்தங்களை கொண்டுள்ளது.

எனவே இந்த புயலால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த புயலி பெயருக்கேற்ப கொந்தளிக்கும் என்றே தெரிகிறது. அக்டோபர் மாதத்தில் முதல் புயலாக இது உருவாகியுள்ளது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+