மிரட்டும் ‛ரெமல்’ புயல்.. நாளை கொட்டப்போகும் அதி கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ரெமல் புயல் அதி தீவிர புயலாக மாறி உள்ளது. இந்த புயல் காரணமாக நாளை எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் புதிய புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‛ரெமல்' என பெயரிடப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை 5.30 மணி அளவில் வலுப்பெற்றது.

அதன்பிறகு நேற்று இரவில் புயலாக உருவானது. இந்த புயல் தீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது வங்கதேசத்தின் கேப்புப்பாராவுக்கும் மேற்கு வங்கம் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும். அந்த சமயத்தில் 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கதேசம், மேற்கு வங்க கடலோர பகுதிகளில் அதி கனமழை மற்றும் சூறைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு வெதர்மேன் ரெமல் புயல் தொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது புயலால் நாளை மழை எங்கு பெய்யும் என அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‛‛நாளை காலை ரெமல் புயல் கொல்கத்தாவில் நிலை கொண்டிருக்கும். இதனால் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது'' என தெரிவித்துள்ளார்.
இந்த ரெமல் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடந்தாலும் கூட அதன் தாக்கம் என்பது 28 ம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம், திரிபுரா, வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள் மற்றும் வங்கதேசத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரெமல் புயல் கரையை கடப்பதையொட்டி கொல்கத்தா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதோடு இன்றும், நாளையும் 350க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications