18 மணி நேரம் நடுக்கடலில் டிட்வா ஸ்டே! சென்னை, திருவள்ளூருக்கு மழை எப்போது ஓயும்? வெதர்மேன்
சென்னை: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்த டிட்வா, அடுத்த 18 மணி நேரத்திற்கு சென்னை கடற்கரைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரைக்கு அருகே கடந்த 24 மணி நேரமாக, ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்த டிட்வா நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்து வருகிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் சென்னை கடற்கரைக்கு அருகே அடுத்த 18 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிகிறது. அதன் பின்னர் சென்னை கடற்கரைக்கு தெற்கு பக்கமாக நகர்ந்து இன்று மாலை முதல் இரவுக்குள் கல்பாக்கம் பகுதியில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிடும்.
சென்னை அட்சரேகைக்கு மேலே இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் நகராததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து மேகக் கூட்டங்களை இன்று நாள் முழுவதும் விட்டுவிட்டு உருவாக்கி மழையை கொடுக்கும்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் கடலோரத்தை நெருங்கும் போது நல்ல மழையை கொடுக்கும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் இந்த டிட்வா இன்று மாலை அல்லது இரவு சென்னைக்கு தெற்கே நகர்ந்து செல்லும் போது, சென்னை, திருவள்ளூரில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, சென்னையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (புதன்கிழமை) முதல் 5-ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications