இவ்வளவு மந்தமா? நீ ஃபெங்கல் இல்ல பொங்கல்..நாளை தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் ! 8 மாவட்டங்களில் மழை
சென்னை: வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து வரும் நிலையில், நாளை மாமல்லபுரம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தொடர்கிறது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாறி தரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டது.

இந்த நிலையில் மிக மெதுவாகவே நகர்ந்து வந்தது. 10 கிலோமீட்டர் வேகத்தில் தொடங்கி 3 கிலோமீட்டர் வேகம் வரை நகர்ந்து வந்த அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில மணி நேரங்கள் நகராமல் அப்படியே நின்றது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கிமீ வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து நேற்று 28 நவம்பர் 2024 அன்று IST நள்ளிரவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ. தொலைவிலுக், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு-தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 390 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும் நிலைக் கொண்டுள்ளது.
இது வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30-ம் தேதி காலை 45-55 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஃபெங்கல் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று நள்ளிரவில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. மேலும் சென்னையில் இன்றும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications