Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் மாறிய வரலாறு.. தலைநகரில் கதறும் மக்கள்! முதல் முறையாக 52.9 டிகிரி செல்சியஸ் வெயில்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் வரலாறு காணாத வகையில் இன்று முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதன்படி டெல்லியின் முங்கேஷ்பூரில் இன்று அதிகபட்சமாக 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் பொதுவாக மே மாதத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும். இந்த ஆண்டு பல மாநிலங்களில் பிப்ரவரியில் இருந்தே கோடை வெயில் கொளுத்த தொடங்கியது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் வெப்பஅலையோடு வெயில் வாட்டி வதைத்தது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.

Delhi logged a maximum of 52 3 degrees Celsius and its the highest ever temperature recorded in the city says IMD

ஆனால் அதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்தது. இதனால் கடந்த 4ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த அக்னி நட்சத்திரத்தில் இருந்து மக்கள் தப்பித்தனர். ஆனாலும் கூட வடமாநிலங்களில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் வெப்ப அலையுடன் கூடிய கோடை வெயில் மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. குறிப்பாக டெல்லியில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. நேற்றைய தினம் வடமேற்கு டெல்லியில் அதிகபட்சமாக 49.9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவானது.

ஆனால் இன்றைய தினம் முதல் முறையாக இந்திய வரலாற்றில் டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை விட அதிகமாக வெயில் பதிவாகி உள்ளது. அதன்படி இன்று டெல்லியின் புறநகர் பகுதியான முங்கேஷ்பூரில் மதியம் 2.30 மணியளவில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது டெல்லி வரலாற்றில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது. கடும் வெப்ப அலையுடன் முங்கேஷ்பூர் பகுதியில் வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டெல்லி மண்டல தலைவர் குல்தீப் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‛‛ராஜஸ்தானில் அனல் காற்று வீசுகிறது. இந்த அனல் காற்று டெல்லியின் புறநகர் பகுதிக்கு வருகிறது. இதனால் டெல்லியில் இந்த ஆண்டு தொடர்ந்து வெப்பநிலை என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியின் புறநகர் பகுதியான முங்கேஷ்பூர், நாரிலா, நஜாப்கார்க் உள்ளிட்ட பகுதிகளில் அனல் காற்று அதிகரித்துள்ளது'' என்றார்.

இதுபற்றி Skymet Weather-ன் வானிலை மற்றும் காலநிலை மாற்ற பிரிவின் துணை தலைவர் மகேஷ் பலாவாட் கூறுகையில், ‛‛டெல்லியில் திறந்தவெளி காலியிடங்களாக இருக்கும் இடங்களில் சூரிய ஒளி நேரடியாக விழுகிறது. இதனால் வெப்பநிலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் மேற்கில் இருந்து வீசும் அனல் காற்றால் டெல்லி புறநகர் பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது'' என்றார்.

மேலும் வரும் நாட்களில் வெப்ப அலை என்பது வடமாநிலங்களில் பல இடங்களில் தொடர்ந்து நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வெப்ப அலை இருக்கும். மேலும் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களிலும் கூட காலியிடங்களில் வெப்ப அலையின் தாக்கம் என்பது இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடரும் வெப்ப அலையால் டெல்லி உள்பட மேல்குறிப்பிட்ட மாவட்டங்களில் மதிய வேளைகளில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி வெப்ப அலையில் நடமாடும்போது உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம், குறிப்பாக அனைத்து வயதினரும் ‛ஹீட் ஸ்ரோக்' பாதிப்பை எதிர்கொள்ளலாம். குறிப்பாக குழந்தைகள், முதியர்வகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+