டிட்வா புயலின் முன்பகுதி எங்கே விழும்? இந்த மாவட்ட மக்கள் நாளை வெளியே வராதீங்க- ஹேமசந்திரன் வார்னிங்
சென்னை: காவிரி டெல்டா மாவட்ட நிலப்பரப்பின் மீது நாளை டிட்வா புயலின் முன்பகுதி விழும் என்பதால் அன்றைய தினம் அப்பகுதி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் "டிட்வா" புயல் குறித்த காவிரி டெல்டா மக்களுக்கான விரிவான அறிக்கை: இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவி வரும் டிட்வா புயலின் முன் பகுதி (மேற்கு பகுதி) காவிரி டெல்டா மாவட்ட நிலபரப்பின் மீது நவம்பர் 29ம் தேதி முன்னேறும்.

இதன் காரணமாக நவம்பர் 28ம் இரவு முதல் (நவம்பர் 30-ம் தேதி) காலை வரை 36 மணி நேரத்திற்கு கீழ்கண்ட முன்னெச்சரிக்கை அறிவுறுதல்கள் வழங்கப்படுகிறது.
1. புயல் டெல்டா கடற்கரையை அடையும் போது மேலும் வலுபெற்று நவம்பர் 29ம் அன்று புயலின் மேற்கு பகுதி காவிரி டெல்டா மாவட்டங்கள் மீது விழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2. இதன் காரணமாக நவம்பர் 28 (வெள்ளி) இரவு துவங்கி நவம் 30ம் தேதி (ஞாயிறு) காலைக்குள் நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிக கனமழை பதிவாகும்.
3. நவம்பர் 29-ம் தேதி குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும், அதித கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
4. குறிப்பாக நவம்பர் 29 (சனிக்கிழமை) காவிரி டெல்டா மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அனைத்து விதமான பயணங்களையும் ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5. விவசாயிகள் விளை நிலங்கள் தண்ணீரை முழுமையாக வடியவைத்து, வடிகால்களில் கவனைகள் அகற்றிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
6. அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் நவம் 30ம் தேதி வரை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
7. தாழ்வான இடங்களில், நீர் நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்வது நல்லது.
8. இப்புயலால் காற்று பாதிப்பு இருக்காது, மக்கள் காற்று அச்சம் துளியும் கொள்ள வேண்டாம்.
9. மீனவர்கள் கடல் சீற்றம் அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், படகுகளை பாதுக்காப்பாக நிறுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
10. நவம்பர் 29, 30 தேதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்வது நல்லது.
டெல்டாவெதர்மேன் வானிலை ஊடகத்தில் தொடர்ந்து நிகழ் நேர அறிக்கைகள் வழங்கப்படும். வானிலை தகவல்கள் அறிந்து எச்சரிக்கையாகவும், பாதுக்காப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
'டிட்வா' என்ற பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்துள்ளது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும்.
இந்த புயலானது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுவை மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications