வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்தம்! புயலாக மாறுமா? டெல்டா வெதர்மேன் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறுமா இல்லையா என்பது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட அதிக மழை பதிவாகக் கூடும்.
1. 06.12.2024 முதல் அடுத்த 5 நாட்களுக்கு (11.12.2024) வரை தமிழகத்தில் வறண்ட வானிலையும், இரவு/அதிகாலை அதிக பனிப்பொழிவும் நிலவும்.

weather rain chennai

2. டிசம்பர் 11ம் தேதி இரவு முதல் 15ம் தேதி வரை தீவிரமடைகிறது 4ம் சுற்று பருவமழை.
3. டிசம்பர் 6ஆம் தேதி முதல் அடுத்த 5 நாட்களில் டெல்டா, தென் மாவட்டம், உள் மாவட்ட விவசாயிகள் பூச்சிக் கட்டுப்பாடு, களைக் கட்டுப்பாடு போன்ற வேளாண்மை பணிகளை மேற்கொள்ளலாம்.
4. நான்காம் சுற்று மழைப்பொழிவு டிசம்பர் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரவலாக மழை எதிர்ப்பார்க்கப்படுகிறது. வடகடலோரம் & டெல்டாவில் பிரதான மழைப் பொழிவை கொடுக்கும்.
5. சுமத்ரா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
6. இத்தாழ்வு பகுதி நன்குமைந்த தாழ்வு பகுதியாக மாறி தமிழகம்/இலங்கை கடற்கரை நோக்கி டிசம் 12ம் தேதி வாக்கில் நகரக்கூடும்.
7. இச்சலனம் புயலாக மாற வாய்ப்பு குறைவு என்றாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
8. வடகடலோரம்/ டெல்டா மாவட்டங்களான #சென்னை #திருவள்ளூர் #காஞ்சிபுரம் #செங்கல்பட்டு #விழுப்புரம் #புதுச்சேரி #கடலூர் #மயிலாடுதுறை #காரைக்கால் #நாகப்பட்டிணம் #திருவாரூர் #தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக கன/மிக கனமழையை கொடுக்கும்.
9. புயல், வெள்ளம் பாதித்த #புதுச்சேரி #கடலூர் #விழுப்புரம் #திருவண்ணாமலை #கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை.
10. இச்சலனம் தமிழக கடற்கரை அருகே வந்து மெதுவாக நகர/மையம் கொள்ள வாய்ப்பு உள்ளது.
ஒட்டுமொத்தமாக டிசம்பர் 10ம் தேதி முதல் 25ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து அடுத்தடுத்து நான்காம் சுற்று & ஐந்தாம் சுறு மழைப்பொழிவை கொடுக்க இருக்கிறது. இவ்வாறு டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இந்த மழை பாதிப்பு குறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று 07-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 11-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 12-ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+