காலையில் வெளியே வந்து பார்த்தால்.. பெரிய ஷாக்.. அப்படியே ஆடிப்போன சென்னை மக்கள்.. என்னாச்சு?
சென்னை: சென்னையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் மக்கள் பலரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் சென்னையிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வேண்டும். ஆனால் மழை பெரிதாகும் கூட தென்மேற்கு பருவமழை இன்னும் முழுமையாக வலிமை அடையவில்லை.

இதனால் வெப்பச்சலனம் ஏற்பட்டு தமிழ்நாட்டில் வறட்சியாக இருக்கும் பகுதிகளில் எதிர்வினையாக மழை பெய்ய தொடங்கி உள்ளது. உதாரணமாக சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கூட தற்போது மழை பெய்கிறது.
வடக்கு தமிழ்நாட்டில் இந்த வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பகல் முழுக்க வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின் மாலை நேரத்தில் மழை லேசாக பெய்தது.
இரவு நேரத்தில் மழை பிச்சு எடுத்தது. கடந்த இரண்டு நாட்களாக இதுவே தொடர் சம்பவம் ஆகி உள்ளது. நேற்று இரவு கூட வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக சாரல் மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. இன்றும் இதே வானிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் வரும் நாட்களில்.. பெரும்பாலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இதேபோல் மழை பெய்யும். முக்கியமாக வட தமிழ்நாட்டில் இதேபோல் மழை பெய்யும். முக்கியமாக மேற்கு காற்று காரணமாக மழை மேகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும். இதனால் மழை சில மணி நேரங்கள் பெய்தாலும் மிகவும் வலுவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
முன்னதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை என்று குறிப்பிட்டு உள்ளனர். இன்று மட்டுமல்ல அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
அதன்படி ஜூலை14ம் தேதி வரை மழை வெளுக்க போகிறது. இன்று நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மேலும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை மாற்றம்: சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேக மூட்டம் என்பதை தாண்டி பனி மூட்டம் போல புகையாக காணப்பட்டது. மலை பிரதேசத்தங்களில் இருப்பது போன்ற வானிலை காணப்பட்டது. சென்னையில் இன்று அதிகாலையில் வெளியே வந்து பார்த்தால் இது சென்னையா இல்லை ஊட்டியா என்று கேட்கும் அளவிற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதனால் மக்கள் பலரும் ஆச்சர்யம் அடைந்தனர். 8 மணிக்கு பின்பும் கூட பொழுது விடியாமல் இருப்பது போல இருட்டாக காணப்பட்டது. மேகமூட்டத்துடன் சேர்ந்து அதிகாலையில் நன்றாக காற்றும் வீசியதால் குளு குளு என்று சென்னை இருந்தது. அதிகாலையே நிலவிய வானிலை காரணமாக மக்கள் பலரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications