Cyclone Ditwah: மக்களே அலர்ட்டா இருங்க.. சென்னையில் மளமளவென நிரம்பும் ஏரிகள்.. நீர் திறப்பு அதிகரிப்பு
சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 1000 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் உபரிநீர் வரும் கால்வாய் கரையோர மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
இதேபோன்று பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று செம்பரம்பாக்கம் ஏரியிலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆட்டத்தை தொடங்கிய டிட்வா புயல்
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியிலும் நேற்று இரவில் இருந்து சிறு தூறலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஊட்டி, கொடைக்கானலில் இருப்பது போன்ற அளவுக்கு குளிரும் வாட்டி வதைக்கிறது.
இதேபோன்று டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று இரவு முதல் நாளை வரை சென்னை உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
இதனால் அணைகளில் இருந்து நீர் அதிகளவில் திறந்து விடப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது வினாடிக்கு 1500 கன அடி திறக்கப்பட்டுள்ளது. முதலில் வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது 1500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
மழை இன்னும் அதிகரிக்கும் பட்சத்தில், அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவானது மேலும் அதிகரிக்கப்படும். எனவே புழல் ஏரி உபரி நீர் கால்வாய் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மொத்தம் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 85 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
கவனமாக இருக்க எச்சரிக்கை
நாரவாரிக்குப்பம், வடகரை, சாமியார் மடம், தண்டல் கழனி, பாபா நகர், வடபெரும்பாக்கம், மணலி, கொசப்பூர் ஆகிய பகுதிகள் வழியாக செல்லும் புழல் ஏரி உபரி நீர் கால்வாய் ஓரம் இருக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையின்றி அங்கு சென்று செல்பி எடுக்க கூடாது, துணி துவைப்பது, வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தில் இருந்தும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காலையில் 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது, வினாடிக்கு 2500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செல்பி எடுக்க கூடாது
கிருஷ்ணாபுரம், சீமாவரம், மணலி, வெள்ளியூர், எண்ணூர் ஆகிய 30 கிராமங்களுக்கு இந்த எச்சரிக்கையானது நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ யாரும் ஆற்றுக்கு செல்லக்கூடாது, ரீல்ஸ் எடுக்க கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 3091 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இன்று காலையில் 1200 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று வினாடிக்கு 2000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. டிட்வா புயலால் நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின்












Click it and Unblock the Notifications