சென்னைக்கு மேலே பாருங்க! எப்படி கூடி நிக்கிதுன்னு! சாட்டிலைட் போட்டோவை பாருங்க.. வருது தாழ்வு மையம்
சென்னை: சென்னைக்கு மேலே அதிக அளவில் மழை மேகங்கள் கூடி நிற்கின்றன. வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர்வதன் காரணமாக சென்னையில் கனமழைக்கான சாதகமான சூழல்கள் ஏற்பட்டு உள்ளன.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பு இல்லை. ஆனால் இதன் காரணமாகவே கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை - தமிழக கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் அடையக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும்.
சாட்டிலைட் புகைப்படங்கள்: இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சென்னைக்கு மேலே அதிக அளவில் மழை மேகங்கள் கூடி நிற்கின்றன. தாழ்வு மையம் நகர்வதால்... மழை மேகங்கள் ஒரு பக்கமாக சென்னைக்கு மேலே திரண்டு உள்ளன.
வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர்வதன் காரணமாக சென்னையில் கனமழைக்கான சாதகமான சூழல்கள் ஏற்பட்டு உள்ளன. புகைப்படத்தில் இவை தெளிவாக இருக்கின்றன.
இதில் சிக்கலே தற்போது இது மெதுவாக நகருகிறது. இது மெதுவாக நகர்வது.. அல்லது நகராமல் இருப்பது தான் பெரிய சிக்கலாக மாறும். ஏனென்றால் ஒரு புயல் சின்னம் மெதுவாக நகர்ந்தால் அது மிகப்பெரிய அளவில் பலம் அடையும்.
பொதுவாக புயல் மெதுவாக நகர நகர அதன் வலிமை அதிகரிக்கும். இதை நோக்கி இன்னும் காற்று, ஈரமான மேகங்கள் அதிக அளவில் குறையும். இதன் ஆற்றல் அதிகமாக இருக்கும்.
இந்த தாழ்வு மையம் நேற்று நகர்ந்து இடம் மாறி இருக்க வேண்டும். ஆனால் இடம் மாறவில்லை. இந்த தாழ்வு மையம் கடுமையாக போக்கு காட்டி வருகிறது. சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் இந்த தாழ்வு மையம் சமயங்களில் நகராமல் உள்ளது. உதாரணமாக இன்று தாழ்வு மையம் பெரிதாக நகரவே இல்லை. கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் மிகவும் மெதுவாக நகர தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக இதன் வலிமை அதிகரித்தபடியே இருக்கிறது. இது நிலத்திற்கு அருகே அடுத்த சில நாட்களில் வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் இது அதிக அளவில் மழையை கொடுக்கும். அதோடு தாழ்வு மையம் கரையை கடந்த பின் வலிமையாக மழை பெய்யும். இதன் காரணமாகவே அடுத்த 4 நாட்கள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை வரும். முக்கியமாக வடதமிழ்நாட்டில் மிக அதிக அளவில் மழை பெய்யும்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications