‛ஊட்டிக்கு 3 நாள் வராதீங்க’.. சுற்றுலா பயணிகளுக்கு நீலகிரி கலெக்டர் அட்வைஸ்! மிரட்டும் ஆரஞ்சு அலர்ட்
நீலகிரி: ஊட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் 3 நாட்கள் வர வேண்டாம் என்று கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அருணா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் வரும் நாட்களில் இன்னும் மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டத்தில் நீலகிரியும் உள்ளது. நீலகிரி மலை பிரதேசம் என்பதால் அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் அருணா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
‛மே 20ல் ரெட் அலர்ட்’.. தமிழகத்தில் அதி கனமழை வாய்ப்பு! அடுத்த 5 நாள் சம்பவம் இருக்கு.. வானிலை மையம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் தீயணைப்பு துறையினர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர், போலீசார், மருத்துவ துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆரஞ்சு அலர்ட்டால் பெய்யும் மழையையொட்டி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு கலெக்டர் அருணா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்த வேளையில், ‛‛நீலகிரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதனால் இந்த 3 நாட்கள் ஊட்டி, நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்.
இது டிரெய்லர் தான்.. நெக்ஸ்ட் 5 நாள் முக்கியம்! சென்னை மக்களே ரெயின்கோட் ரெடியா? வெதர்மேன் அலர்ட்
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்த அறிவுரை வழங்கப்படுகிறது. அதையும் மீறி நீலகி வருவோரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 3,500 முன்கள பணியாளர்கள், 100 ஜேசிபிகள், மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications