4 மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வு! எச்சரிக்கையை மீறி குமரி கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் இன்று இரவு 11.30 மணி வரை அலை சீற்றத்துடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்ட கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படுவதால் கடல் அலைகள் தாறுமாறாக சீற்றத்துடன் இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

குமரியில் 2.1 மீ, ராமநாதபுரம் 2.3 மீ, தூத்துக்குடி, நெல்லையில் 2.2 மீ உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்பு எனவும் இன்று இரவு 11 மணி வரை கடல் அலை சீற்றம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பம் தகித்து வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா உள்பட பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் பதிவானது. இதையடுத்து கத்திரி வெயில் தொடங்கியதும் மக்களுக்கு வெயில் பயம் மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில் வருண பகவான் கொடையாளி என்பதை நிரூபித்தது போல் ஆங்காங்கே ஆலங்கட்டி மழையும், கனமழையும் பெய்தது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்யவும் தொடங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கீழடுக்கு சுழற்சி, வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக கனமழை பெய்தது.
இந்த நிலையில் உலகம் முழுவதுமே கடல் பரப்பின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அதீத மழை உள்ளிட்ட அசாதாரண வானிலை சூழல்கள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தென்மாவட்ட கடற்கரைகளுக்கு கள்ளக் கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியாக இருக்கும் கடல் எந்த வித காற்று, புயல் , சுழல் இல்லாமல் திடீரென கொந்தளிப்பதுதான் கள்ளக் கடல் பாதிப்பு என்கிறோம்.
அதாவது சற்று விரிவாக சொல்ல வேண்டுமென்றால் பொதுவாக கடல் சீற்றம் என்பது புயலோ, காற்றழுத்த தாழ்வு நிலையோ, கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தின் போதும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற எந்த நிகழ்வுகளும் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் இரவு 11.30 மணி வரை கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படவுள்ளது. இதனால் குமரியில் 2.1 மீ, ராமநாதபுரம் 2.3 மீ, தூத்துக்குடி, நெல்லையில் 2.2 மீ உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ள என்றால் திருட்டு என பொருள். எந்தவித வானிலை முன்னறிவிப்பும் இன்றி திருடன் போல் கடல் சீற்றம் வருவதால்தான் இதை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கிறார்கள். இந்த கள்ளக்கடல் நிகழ்வு இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் ஏற்படும் போது கடலோரத்தில் உள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் இருக்க சற்று இடைவெளிவிட்டு படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும். வலைகள் உள்பட மீன்பிடி கருவிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் நாளை பக்ரீத் கொண்டாடப்படும் நிலையில் மக்கள் சுற்றுலா பகுதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தை பார்க்க கூட்டம் கூடியுள்ளது. அத்துடன் சிலர் கடலில் குளித்தும் வருகிறார்கள். இந்த தென் தமிழக பகுதிகளில் கள்ளக் கடல் நிகழ்வு எச்சரிக்கை கடந்த இரு மாதங்களில் இது மூன்றாவது முறையாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications