Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு நொடி அதிர்ந்த விமானம்.. சென்னை ஏர்போர்ட்டில் பைலட் செய்த செயல்! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையே நேற்று காலை புயல் சமயத்தில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது திடீரென நிலை தடுமாறியது. பைலட் துரிதமாகச் செயல்பட்டதால் அங்கு நடக்கவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

கடந்த நவ. 23ம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல வலுவடைந்த கடந்த நவ. 29ம் தேதி பெஞ்சல் புயலாக மாறியது. இந்த புயல் முதலில் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நவ. 30ம் தேதி கரையைக் கடக்கும் எனச் சொல்லப்பட்டது.

cyclone fengal chennai airport flight

பெஞ்சல் புயல்: ஆனால், அந்த புயல் கணிப்புகளின்படி இருக்கவில்லை. இதனால் நேற்று மாலையே அது கரையைக் கடக்கத் தொடங்கியது. இந்த புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. புயல் இப்போது தான் மெல்ல வலுவிழந்து வரும் நிலையில், வடகடலோர தமிழகம் மற்றும் புதுவையில் நல்ல மழை பெய்து வருகிறது. பொதுவாக மழைக் காலங்களில் விமானச் சேவை ஆபத்தானதாக மாறும். புயல் போன்ற காலங்களில் பல விமானங்கள் ரத்து கூடச் செய்யப்படும்

இதற்கிடையே மழையால் விமான நிலையம் எந்தளவுக்கு ஆபத்தானதாக மாறியுள்ளது என்பதை விளக்கும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரபல யூடியூபரும் ஏவியேஷன் செய்தியாளருமான ஜோஷ் காஹில் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கவே நமக்கு அச்சமாக இருக்கிறது.

சென்னை விமான நிலையம்: அதாவது சென்னை ஏர்போர்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் விமானம் ஒன்று தரையிறங்க வருகிறது. அதன் பின்பக்க டயர் மட்டும் ஓடுதளத்தில் படும் நிலையில், விமானத்தால் ஒழுங்காகத் தரையிறங்க முடியவில்லை. அதன் இடது பின்புற டயர் முதலில் தரையில் பட்டு பவுன்ஸ் ஆகிறது. ஒரு கட்டத்தில் அது இடதுபுறம் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அளவுக்கு மோசமான நிலைக்குச் செல்கிறது. இருப்பினும், பின்னர் ஒருவாறு சமாளித்து மீண்டும் பறந்துவிடுகிறது.

வானிலை மிகவும் சவாலானதாக இருந்ததால் விமானியால் விமானத்தைத் தரையிறக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் தரையிறங்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு மீண்டும் பைலட் விமானத்தைப் பறக்க வைத்துவிட்டார். அவர் துரிதமாகச் செயல்படவில்லை என்றால் சென்னை விமான நிலையத்தில் மிக மோசமான விபத்து கூட ஏற்பட்டு இருக்கும். இந்த வீடியோவை பதிவிட்ட ஜோஷ், "சென்னை ஏர்போர்ட்டில் இது மோசமாக முடிந்திருக்கலாம். பெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் தரையிறங்க முடியாமல் தவித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளனர்.

ஷாக் வீடியோ: நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். விமானி துரிதமாகச் செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், பலரும் அந்த பைலட்டை பாராட்டி வருகிறார்கள். இந்தச் சம்பவத்தால் விமானமே ஒரு நொடி அதிர்ந்து போனதாகவும் நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள். அதேநேரம் இன்னும் சிலர் இது சென்னை ஏர்போர்ட் தான் என்ற போதிலும் இது நேற்று நடந்த சம்பவம் தானா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விமான நிலையம் நேற்று மூடப்படுவதற்கு முன்பு காலை 9 மணியளவில் இது நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் இண்டிகோ தரப்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+