புயலுக்கு நடுவே.. மழையில் அமைச்சர் ரோஜா செய்த செயல்! வெளியான வீடியோவால் சர்ச்சை.. என்ன நடந்தது?
அமராவதி: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று ஆந்திர மாநிலம் பாபட்லா கடலில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. இந்த வேளையில் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா குடையை பிடித்தபடி மழையில் நடனமாடியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக கடந்த 3ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக அன்றயை தினம் இரவில் மழை வெளுத்து வாங்கியது.

3ம் தேதி பெய்ய தொடங்கிய கனமழை 4ம் தேதி இரவு வரை நிற்கவே இல்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல சூழ்ந்தது. பஸ், ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இன்னும் சென்னையின் பல்வேறு சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் என்பது அதிகமாக உள்ளது. அதனை வெளியேற்றும் பணியில் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படை வீரர்கள் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தை சீக்கிரமாக வடிய வைத்து சென்னையை இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக அரசும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.
இதற்கிடையே தான் நேற்று மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாபட்லாவில் கரையை கடந்தது. முன்னதாக திருப்பதி, நெல்லூர், சித்தூர் உள்ளபட பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களிலும் கனமழை மிக தீவிரமாக பெய்தது. பாபட்லாவில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தபோது மரங்கள் வேரோடு சாய்ந்தன.
புயல் காரணமாக ஆந்திர மாநில கட்சியின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 6 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்0 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு அமைச்சர்களும் தீவிரமாக களத்தில் இறங்கினர்.
நடிகையும், ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜாவும் களப்பணியில் ஈடுபட்டார். பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். இவர் இரவில் புத்தூர் பேரூராட்சி பிள்ளாரிப்பட்டு அலுவலகம் தா்மாம்பாபுரத்தில் கனமழை பெய்தது. அப்போது ரோஜா குடையை வைத்தபடி மழையில் ரீல்ஸ் செய்தார். இந்த வீடியோ வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி தெலுங்கு தேசம் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது புயல் போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் அமைச்சர்கள் அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தோம். ஆனால் ரோஜா மழையை ரசித்து நடனம் ஆடுகிறார்'' என சாடியிருக்கிறது. இதையடுத்து ரோஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications