சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை! சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கவில்லை.. மாநகராட்சி குட் நியூஸ்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுகிறது. இந்நிலையில், நேற்றிரவு சென்னையில் பரவலாக மழை பெய்தது. ஆனாலும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி கூறியிருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ. தொலைவிலும் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறுகிறது. அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திரம், அதையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இதன் காரணமாக திருவள்ளூர் தொடங்கி சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் என வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. திருவொற்றியூர் தொடங்கி திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர் வரையிலும், அண்ணாநகர், அம்பத்தூர் ஆவடி வரையிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை பெய்தும் சென்னையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 20 சுரங்கப்பாதைகளில் எதிலும் மழைநீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி கூறியிருக்கிறது.
ஏற்கெனவே மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மழையால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து அனைத்து துறை அதிகாரிகளும் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மழை நீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களில் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டு அவை தயார் நிலையில் இருக்கின்றன.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications