கொட்டும் கனமழை.. தமிழகத்தில் இரு தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு! எங்கு தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வரும் நிலையில், கனமழை காரணமாக இன்று குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழையை நமக்குக் கொடுக்கவில்லை. தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இருப்பினும், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலத்தில் கணிசமாக நல்ல மழை பெய்தே வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் கடந்த சில காலமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவது மக்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது.
மழை காரணமாகக் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மழை காரணமாக இன்று குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக இரு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்,
அதேநேரம், நீலகிரி மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போலச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், கடலூர், மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிவகங்கை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதால் அங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாகத் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை சூழலுக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாகத் தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கினாலோ, வகுப்பு நடத்தச் சூழல் இல்லாத நிலை ஏற்பட்டால் விடுமுறை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு












Click it and Unblock the Notifications