பேய் மழையால் மிதக்கும் சென்னை.. வெள்ள நீர் வடியாதது ஏன்? மாநகராட்சி ஆணையர் விளக்கம்
சென்னை: அடையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், கடும் கடல் சீற்றம் காரணமாக வெள்ள நீர் கடலுக்குள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களும் மழை நீரினால் சூழப்பட்டுள்ளன. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன.
ஒரு சில இடங்களில் குடியிருப்புகளின் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன. சென்னை மடிப்பாக்கம் பகுதியில், தரைத் தளத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் தண்ணீர் சாலையை சூழ்ந்தது. வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையை வெள்ளம் சூழ்ந்தது.
கடலுக்குள் செல்வதில் தாமதம்: சாலையிலும் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் வராமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மிக்ஜாம் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழையின் காரணமாக சென்னை மக்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் பெருகி இருப்பதால் சென்னைவாசிகள் மிகுந்த சிரமமடைந்துள்ளனர். தமிழக அரசு வெள்ளநீரை வடிய வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளநீர் எப்போது தான் வடியும் என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் வெள்ள நீர் கடலில் செல்லாதது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
மாநகராட்சி விளக்கம்: சென்னை அடையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், கடும் கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் அதி கனமழையால் பெய்த வெள்ள நீரை கடல் உள்வாங்கவில்லை. கடல் தொடர் சீற்றத்துடன் காணப்படுவதால் வெள்ள நீரை கடல் உள்வாங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளது.
அடையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், கடும் கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் செல்வதில் தாமதம். அடையாற்றில் வெள்ளப்பெருக்கால் மேற்கு மாம்பலம் சைதாப்பேட்டைஉள்ளிட்ட இடங்களில் மழை நீர் ஆற்றில் கலப்பது தாமதம் கடல் சீற்றம் குறைந்த பிறகே வழக்கம் போல் அடையாறு ஆற்று நீர் கடலுக்குள் செல்லும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications