புயலால் கரண்ட் இல்லைன்னு கவலையா.. மிக்சி தேவைப்படாத சுவையான சிற்றுண்டி, மதிய சாப்பாடு லிஸ்ட் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னையில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பரவலான மின்வெட்டால், பலரும் உணவு தயாரிப்பில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்கள் முதல் வட தமிழகம் வரை பல மாவட்டங்களில் இதுதான் இப்போது நிலைமை.

மிக்சி போன்ற மின்சாதனங்களைப் பயன்படுத்த முடியாத நிலையில், சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தயாரிக்க என்ன செய்யலாம் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஒரு பக்கம் உணவு டெலிவரி ஊழியர்களாலும் புயலுக்கு இடையே உணவு சப்ளை செய்ய முடியாது. தேவையில்லாமல் அவர்களை ரிஸ்கிற்கு நாம் உட்படுத்தவும் கூடாது. எனவே நல்ல பிள்ளையாக நாமே சமைத்துவிடலாம். சரிதானே..

cyclone fengal food electricity

மின்சாரம் தேவை இல்லாமல் செய்யக்கூடிய எளிய காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு உணவுகள்:

சாதாரண அவல் அல்லது சாமை அவல் ஆகியவற்றையோ ஊற வைத்து, வாழைப்பழமோ, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

இட்லியை அடுப்பில் வேகவைத்து சாம்பார் உடன் சாப்பிடலாம். தோசையையும் சாம்பாருடன் சாப்பிட முடியும். ரவையை வறுத்து காய்கறிகளை பொடியாக நறுக்கி, தண்ணீர் ஊற்றி, வேகவைத்து உப்புமாவாக சாப்பிடலாம். அரிசி, பருப்பு, காய்கறிகளை வேகவைத்து, நெய், வெல்லம் சேர்த்து பொங்கல் செய்யலாம். இடியாப்பத்தை சாம்பாருடன் சாப்பிடலாம். வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை அப்படியே சாப்பிடலாம். பிரட் இருந்தால் பிரட் உப்புமாவும் செய்யலாம். கோதுமை மாவு, தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து, சப்பாத்தி தயாரிக்கலாம். சப்பாத்திக்கு ஜாம் வைத்து கூட அவசரத்திற்கு சமாளித்து விடலாம்.

மதிய உணவு: காய்கறிகளுடன் கலந்து சோறு செய்து சாப்பிடலாம். பருப்பை வேகவைத்து, தாளிப்பு செய்து சாப்பிடலாம். சாதத்தை எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதமாக மாற்றி சாப்பிடலாம். கொள்ளு, பச்சை பயறு, அல்லது கடலை பொடியாக உப்பு சேர்த்து சுண்டல் செய்வது எளிது.

ராகி மாவை தண்ணீரில் கலந்து, காய்கறிகளுடன் சேர்த்து புட்டு செய்து சாப்பிடலாம். கோதுமை மாவு, தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து, ரொட்டி தயாரிக்கலாம். தக்காளி, வெங்காயம் போன்றவை நறுக்கி மசாலா சேர்க்காமல் சமையல் இல்லாமல் சாப்பிடலாம். தேங்காய்த் துருவல் மற்றும் வெல்லம் சேர்த்து பொரி சாப்பிடலாம். வயிறு கம்மென்று இருக்கும் என்கிறார்கள் அவசர சமையல் வல்லுநர்கள்.

மின்சாரம் இல்லாததால், அடுப்பு, சூரிய சக்தி கொண்ட குக்கர் போன்றவற்றை பயன்படுத்தலாம். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். போதிய வெளிச்சம் இருக்காது என்பதால், தண்ணீரை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். உணவு தயாரிக்கும் போது, சுகாதாரத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+