அதிக புயல்களை வீசப் போகும் டிசம்பர்.. சென்னை மக்களே எச்சரிக்கை..! MJO பற்றி தெரியுமா?
சென்னை: இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கத்தைவிடப் புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஆகவே, சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மழைக் காலம் தொடங்கிவிட்டாலே முன்பு எல்லாம் கடலோர மக்கள் அதிகம் பயப்படுவார்கள். அதேபோல மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடும். இந்த அறிவிப்பு பெரும்பாலும் மீனவ மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதாகவே இருந்துள்ளது.

ஆனால், காலநிலை மாற்றத்தால் இன்று மழைக் காலம் என்றால் சென்னை மக்கள் வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய அளவுக்குப் பயம் நிலவுகிறது. வீடு மூழ்கிவிடுமோ? சாப்பாட்டுக்கூட வழி இல்லாமல் தவிக்க வேண்டிய நிலை வருமோ? வேளச்சேரி தப்புமா? பள்ளிக்கரணை என்ன ஆகும் எனச் சென்னை மக்கள் மிகச்சாதாரணமாக உரையாடலின் போது பொது இடங்களில் கவலையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இப்போதே காரை எந்தப் பாலத்தில் கொண்டு போய் நிறுத்தலாம்? வீட்டை வேறு எந்தப் பகுதிக்கு மாற்றலாம் என மனதிற்குள் அசைபோடத் தொடங்கிவிட்டனர். ஒரு பக்கம் மழை பற்றிய பயம் மற்றொரு பக்கம் அக்டோபர் மாதம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு மக்கள் மதிய நேரங்களில் வீட்டிற்குள் முடங்கி விடுகின்றனர்.
உண்மையில் இயற்கை இப்போது மக்களை வஞ்சிக்க ஆரம்பித்திருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆந்திராவில் வெள்ளம், வயநாட்டில் நிலச்சரிவு என திரும்பிய பகுதிகளில் எல்லாம் இயற்கையின் சீற்றம் அதிகரித்துள்ளது. ஆகவே, சென்னை மக்கள் கவலையில் மூழ்க ஆரம்பித்துள்ளனர். இந்த மாதம் மழையின் நிலைமை எப்படி இருக்கும்? டிசம்பரில் வெள்ளம் வருவதற்காக வாய்ப்புகள் உள்ளதா? எனப் பல சந்தேகங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியை விதமாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் மழை தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், "பொதுவாக அக்டோபர் மாதம் முதல் பாதியில் வெப்பச்சலனம் காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மழை வரும். ஏனென்றால் இது ஒரு பருவம் முடிந்து அடுத்த பருவம் தொடங்கக்கூடிய காலம். அதாவது தென்மேற்கு பருவக் காலம் விடைபெற்று வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும். இந்தக் காலத்தில் காற்றின் திசை மாறும். இதனால் வட உட்புற மாவட்டங்களில் நல்ல மழை எதிர்பார்க்கலாம். திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்.
படிப்படியாக இந்த வானிலை சூழல் மாறும் போது கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கும். காற்றின் திசை கிழக்குநோக்கி வரும்வரை கடலோரப் பகுதிகளில் மழை இருக்காது. வானிலை பற்றி பேசுபவர்கள் இப்போது MJO (Madden-Julian Oscillation) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். Madden-Julian Oscillation என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர இருக்கிறது. இது நகரும் போது மழையின் தன்மை, வெப்ப சலனம் என அனைத்தும் அதிகமாகும். MJO இந்தியப் பெருங்கடலை மையமிட்டுள்ளதால், வழக்கத்தை விட அதிக மழையை எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆண்டு எல்நினோ பாதிப்பைப் பார்த்தோம். பசிபிக் பெருங்கடலில் வெப்பமானது இயல்புக்கும் புள்ளி 5 டிகிரி அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு எல்நினினோ ஆனது லா நினினோ ஆக மாறிக் கொண்டே இருக்கிறது. அதாவது கடல் வெப்பமானது இயல்புநிலைக்குக் கீழாகப் புள்ளி 5 டிகிரி இருந்தால் அதை லா நினினோ என்று சொல்வோம். இதனால் புயல்போன்ற அதிகரிக்கும். இதனால் வடகிழக்கு பருவமழைக் காலமே ஜனவரி வரை நீடிக்கக்கூடும். இது விவசாய பெருமக்களுக்குப் பாதகமான சூழலை உருவாக்கும். ஏனென்றால் பொங்கல் காலத்தில் பல பகுதிகளில் அறுவடை அதிகம் நடைபெறும்.
சாதாரணமாக எல் நினினோ ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மழை நின்றுவிட்டால், மீண்டும் மழை வராது. ஆனால் லா நினினோ ஆண்டுகளில் டிசம்பர் முழுக்கவே மழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். கூடவே புயல் அதிகம். 2011 ஆம் ஆண்டு தானே புயல் வந்தது. 1964இல் ராமேஸ்வரம் புயலைப் பார்த்தோம். இவை லா நினினோ ஆண்டுகள்தான்" என்கிறார்
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications