சென்னை புறநகர்களில் கனமழை.. வடமாவட்டத்தை இன்று நெருங்கும் புயல்.. நாளையும் 'சம்பவம்' இருக்கு
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, படிப்படியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை இன்று நெருங்குகிறது. இதையடுத்து இன்றைய தினம், வடமாவட்டங்கள் மட்டுமல்லாமல், சென்னை புறநகர்களிலும் மழை வெளுக்க போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது. மழை நீர் சாலைகளில் தேங்கும் நிலையில், அதனை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரெட் அலர்ட்: இந்நிலையில், இன்றும், நாளையும் சென்னையில் அதிதீவிர கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று அறிவிப்பு நேற்று வெளியானது.
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை மையம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.
ராணிப்பேட்டை: நாளை 17ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மற்றொரு அறிவிப்பினை வானிலை மையம் வெளியிட்டிருக்கிறது. அதில் இன்றும், நாளையும் எந்த அளவுக்கு மழை பொழியலாம் என்பது குறித்த எதிர்பார்ப்புகளையும் தெரிவித்துள்ளது.. அந்த அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இது, நேற்று காலை நிலவரப்படி, தமிழகம் நோக்கி மெதுவாக நகர துவங்கியுள்ளது.
வட மாவட்டம்: இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று மேற்கு, வடமேற்கு திசையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கரையை நெருங்கும். தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் வரை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த நிகழ்வுகளால், வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், 22 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை: வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், 12 முதல் 21 செ.மீ., வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளுக்கு, ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல, நாளை ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுஉள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ரெட் அலர்ட்: ரெட் அலர்ட் காரணமாக, சென்னை மற்றும் புறநகரில், ஒரு சில இடங்களில் இன்று, 25 செ.மீ.,க்கு மேல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்ட கடலோர பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பிரபல சேனல் ஒன்றுக்கு பிரதீப் ஜான் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது, "இன்று அதி கனமழை பெய்யும் என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை.. வடசென்னை, திருவள்ளூர் பகுதிகளில் மட்டுமே நேற்றிரவு கனமழை பெய்திருக்கிறது.. எனவே, சென்னைக்கு ஆபத்து இல்லை.. எல்லா மழையுமே வெள்ளம் கிடையாது.. முதல் மழையே பெரிய மழையாக வாய்ப்புமில்லை.. சென்னைவாசிகள் அச்சப்பட தேவையில்லை" என்று பிரதீப் ஜான் நம்பிக்கை தகவலை தெரிவித்துள்ளார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications