கரையை கடந்த பின்பும்.. ஆட்டம் காட்டும் பெஞ்சல்.. 3 மணி நேரமாக ஒரே இடத்தில்.. பாலச்சந்திரன் வார்னிங்
சென்னை: பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபருக்கு பின்னர் தற்போது புதுச்சேரியில் கனமழை பெய்துள்ளது 2004ஆம் ஆண்டு புதுவையில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதற்கு பின் பதிவான மிக அதிக கனமழை இதுதான்.

பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கடந்த 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மயிலத்தில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 47 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலையில் 18 செ.மீ., செய்யாறில் 16.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கொளப்பாக்கம் பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
முக்கியமான 3 மணி நேரம்: பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பெஞ்சல் புயல் 3 மணிநேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கரையைக் கடந்த புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்சல புயல் 35 மணி நேரம் பயணித்து இன்று (டிச.01) அதிகாலை 1.30 மணிக்கு மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடந்தது; 11.30 மணிக்கு பெரும்பாலான பகுதிகள் கரையை கடந்தாலும் 1.30 மணிக்கே முழுமையாக அந்த புயலின் பாகம் கரையை கடந்தது. அடுத்த 3 மணி நேரத்தில் இது வலிமை இழக்கும்.
இதனால் அடுத்த 3 மணி நேரம் முக்கியம் ஆகும். ஏனென்றால் இந்த புயல் தற்போது Pull Effect எனப்படும் இழுவை காரணமாக கூடுதலாக மேகங்களை இழுத்து வந்துள்ளது. இந்த மேகங்கள் மழையை கொடுக்கும். இப்படி மழையை கொடுப்பதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல காற்றும், மழையும் நீடிக்கும்.
அதன்பின் இந்த புயல் தாழ்வு நிலையாக வலிமை இழக்கும். தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வலிமை இழக்கும். அதன்பின் முழுமையாக வலிமை இழக்கும். பெஞ்சல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி மோசம்: பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தாலும் தற்போது வரை மரக்காணத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. காற்றின் வேகம் குறையவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு புதுச்சேரி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நின்றாலும், தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.
புதுச்சேரியில் மீட்புப் பணிக்கு ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அண்ணா நகர் முழுக்க நீரில் மூழ்கி உள்ளது. ரெயின்போ காலனி பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications