சென்னையில் நாளை மாநகர பேருந்துகள் இயங்குமா? பெங்கல் புயலுக்கு நடுவே முக்கிய அறிவிப்பு
சென்னை: ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னையில் நாளை மாநகர பஸ்கள் இயங்குமா? இல்லையா என்பது பற்றி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஃபெங்கல் புயல் காரணமாக நாளை சென்னை, புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது.

இந்நிலையில் புயல் கரையை கடப்பதையொட்டி சென்னை மக்களுக்கு அரசு சார்பில் முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நாளை மாநகர அரசு பஸ்கள் இயங்குமா? இல்லையா? என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி புயல் காரணமாக நாளை சென்னை மாநகர பேருந்துகள் நாளை வழக்கம் போல இயங்கும். புயல் காரணமாக போக்குவரத்து சேவையில் மாற்றம் இல்லை என்று சென்னை பெருநகர பேருந்து போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளில் மட்டும் மதியத்துக்கு மேல் பஸ் சேவைகள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
அதேபோல் ரயில் சேவையிலும் மாற்றம் என்பது தற்போது வரை செய்யப்படவில்லை. இருப்பினும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னையில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதோடு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தல்
மேலும் சென்னை வண்டலூர் பூங்கா நாளை மூடப்படும். அதேபோல் பிற பூங்காக்கள், கடற்கரைகள் மூடப்பட உள்ளது. கட்டுமானத் தளங்களில் உள்ள உயர் கிரேன்கள், விளம்பர பதாகைகளை பாதுகாப்பாக கீழே இறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ன்னை உள்பட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் பொதுமக்கள் கூடவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications