ஒருவார உணவு பொருட்களை சேமித்து கொள்ளுங்கள்.. புயலால் தமிழக பேரிடர் மேலாண் ஆணையம் தந்த 12 அறிவுரை
சென்னை: ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக இன்று முதல் சூறைக்காற்றுடன் புதுச்சேரி, சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம், கடலூர் உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் புயலுக்கு முன்பு மக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி 12 பாயிண்டுகளை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவானது. இந்த புயல் நாளை சென்னை, புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் இன்று இரவு 9 மணி நிலவரப்படி நாகைக்கு கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்பட பல இடங்களில் கனமழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
இந்நிலையில் தான் புயலுக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து 12 பாயிண்டுகளை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
1. அவசர தகவலுக்காக செல்போன்களை சார்ஜ் செய்யவும்.
2. வானொலி கருவியுடன் கூடுதல் பேட்டரிகளை வைத்து கொள்ளவும்.
3. வானிலை அறிவுப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.
4. ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும்.
5. பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும்.
6. .அவசர கால பெருட்கள் மற்றும் முதலுதவி பெட்டிகளை தயாராக வைத்திருக்கவும்.
7. வீட்டின் கூரையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
8. கால்நடைகள்/செல்ல பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும்.
9. புயல் அல்லது வெள்ள எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட உடனே உயரமான இடத்திற்கோ அல்லது அரசு முகாமிற்கோ செல்ல வேண்டும்.
10. குறைந்தபட்சம் ஒரு வார உணவு மற்றும் தண்ணீரை சேமிக்கவும்.
11. நீங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பயிற்சி முகாம்களை நடத்துங்கள் .
12. அரசு அறிவுறுத்தல்களை பின்பற்றவும், அறிிவிப்புகள் பரிந்துரைக்கப்பட்டால், நியமிக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லவும். வதந்திகளை நம்ப வேண்டாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications